2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'நல்லாட்சி அரசாங்கத்தில் நீதிமன்றங்கள் சுயாதீனமாக இயங்குகின்றன'

Suganthini Ratnam   / 2016 மார்ச் 03 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.எ.காதர்

இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் தலையீடுகள் இல்லாம் நீதிமன்றங்களும் நீதிபதிகளும் சுயாதீனமாக இயங்குகின்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை கல்முனை நீதிமன்றத்தொகுதிக்கு வருகை தந்து நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிப் பார்வையிட்ட பின்னர், சட்டத்தரணிகள் முன்னிலையில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்;

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  கடந்தகால ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதைப் போன்றல்லாது, இன்றைய நல்லாட்சியில் எல்லா நடவடிக்கைகளும் சுயாதீனமாகவே நடைபெறுகிறது.

நீதிமன்றங்களைப் பார்க்கின்றபோது, கல்முனை நீதிமன்ற வளாகம் சிறப்பாக இயங்குவதை அவதானிக்க முடிகின்றது. அதேபோன்று, கல்முனை சட்டத்தரணிகள் சங்கமும் நல்ல முறையில் இயங்குவதையும் காணமுடிகின்றது. மேலும், கல்முனையில் சகல வசதிகளையும் கொண்டதாக  நீதிமன்றக் கட்டடத்தொகுதி அமைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X