2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'நல்லாட்சி அரசாங்கம் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு வழிவகுத்திருக்கின்றது'

Niroshini   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்,பைஷல் இஸ்மாயில்

நல்லாட்சி அரசாங்கத்தில் கல்விக்கு  அதிக நிதி ஒதுக்கியிருப்பது இலங்கையின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு வழிவகுத்திருக்கின்றது என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களினால் வெளியிடப்பட்ட இலக்கு எனும் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு நேற்று புதன்கிழமை கல்லூரி மண்டபத்தில் அதிபர் எம்.எம்.ஹிர்பகான் தலைமையில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நல்லாட்சி அரசாங்கத்தில் கல்விக்கு  அதிக நிதி ஒதுக்கியிருப்பது இலங்கையின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு வழிவகுத்திருக்கின்றது. இதன் மூலம் பின்தங்கிய பிரதேசப் பாடசாலைகளின் பௌதீக வளங்களை கட்டியெழுப்புவதற்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இது இன்றைய நல்லாட்சியின் நல்ல சகணமாகும்.

இந்தப் பாடசாலையில் இருக்கின்ற பல்வேறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டது.இதன்முதல் கட்டமாக இப்பாடசாலை மண்டபத்துக்கு கதிரைகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஐந்த இலட்சம் ரூபாயை ஒதுக்குகின்றேன். பின்னர் படிப்படியாக என்னால் முடிந்த வரை இப்பாடசாலைக்கு உதவுவேன் என்றார்.

இந்நிகழ்வில், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்,கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் டொக்டர் எம்.ஐ.எம்.ஹபீல்,பிரதி அதிபர் ஏ.எம்.அன்சார்,ஆரம்பப்பிரிவு அதிபர் முகைதீன் முசம்மில்,உதவி அதிபர் எம்.எம்.எம்.நியாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X