Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 18 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
முஸ்லிம் சமூகத்தினுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட கட்சியை அமைச்சர் ரிஷாட்டின் சொந்தத் தேவைகளுக்காக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தொடர்பில் அண்மைக்காலமாக வெளியிட்டு வரும் ஊடக அறிக்கைகள் தொடர்பில் இன்று(18) கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அமைச்சர் ரிஷாட்டின் குடும்பச் சொத்தல்ல. அகதி முஸ்லிம்களின் பிரச்சினைகளை வீதிகளிலும் வெளிநாடுகளிலும் பேசிப் பேசி வளர்த்த கட்சி, கிழக்கிலே உள்ள விதவைப் பெண்களை காட்டி வளர்த்த கட்சி இது. இந்த நாட்டிலே வாழுகின்ற ஏழைகளின் சொத்து இதனை கூறுபோடுவதற்கு நான் ஒருபோதும் விடமாட்டேன்.
இந்தக் கட்சியையும் அகதி சமூகத்தினையும் இவர்களின் பொருளாதாரத்துக்காகவும் சுயநலத்துக்காகவும் பயன்படுத்துவதை இனியும் அனுமதிக்க முடியாது.
எனவே, இந்தக்கட்சியை வைத்து இவர்கள் செய்த மோசடிகளையும், எங்களுக்கு நடந்த அநியாயங்களையும் சமூகத்தைக் காட்டி நடத்துகின்ற போலி அரசியல் நாடகங்களையும் விரைவில் மக்களுக்கு எடுத்துச் சொல்ல ஆயத்தமாக இருக்கின்றோம்.
எதிர்வரும் காலங்களில் பாரிய ஊடக மாநாடுகளை நடத்தி இந்த நாட்டு மக்களுக்கு உண்மைகளை உரக்கச் சொல்லுவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
37 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
58 minute ago
1 hours ago