Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
1956ஆம் ஆண்டு முதல் நாட்டில் வறுமை ஒழிப்பதற்கான உறுதியான பல செயற்திட்டங்கள் கொண்டுவரப்பட்ட போதிலும் இன்றுவரை 25 மாவட்டங்களிலும் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களில் தொகை அதிகரித்துக் கொண்டு செல்கின்றது என திருக்கோவில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன் தெரிவித்தார்.
அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை(2) அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் மற்றும் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு இடையில் இடம்பெற்ற வறுமை ஒழிப்பு வேலைத்திட்டங்களை முறைப்படுத்தல் செயலமர்வில் கலந்துகொண்டு உரையற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
எமது அரசாங்கம் நாட்டில் இருந்து வறுமையை முற்றாக ஒழிக்க வேண்டும் என தெரிவித்து பல நல்ல திட்டங்களை நடைமுறைபடுத்துகின்ற போதிலும் வறுமை கோட்டின் கீழ் வாழுகின்ற குடும்பங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்தே செல்கின்றது.
உதாரணமாக எமது திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் 2014 ஆம் ஆண்டு 4370 பேர் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட அதேவேளை 2015ஆம் அண்டு 4400 பேர் இனம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் வறுமை ஒழிப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் 'சமூர்த்தி' திட்டங்கள் 25 மாவட்டங்களிலும் உள்ளன. இதற்கு 23 மாவட்ட அதிகாரிகளும் 316 தலைமை முகாமையாளர்களும் 1042 பிராந்திய அதிகாரிகளும் கிராம மட்டங்களில் 14,000 சமூர்த்தி உத்தியோகத்தர்களும் 18,788 சமூர்த்தி சங்கங்களும் மற்றும் 207,975 கிராம மட்ட சிறு குழுக்கள் என ஒரு வலுவான நிர்வாக கட்டமைப்புக்கள் இருக்கின்ற போதிலும் வறுமையை ஒழிக்க முடியாமல் இருப்பது வேதனை அளிக்கின்றது.
எனவே பிரச்சினைகளை இனங்கண்டு தீர்த்து இனிவரும் காலங்களிலாவது ஒரு சவாலாக இதனை எடுத்து வறுமை ஒழிப்பு வேலைத்திட்டங்களை முறையாக செயற்படுத்த வேண்டும்' என்றார்.
19 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
3 hours ago