Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 மே 11 , மு.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.சி.அன்சார்
புனித நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்காக சவூதி அரேபியா மற்றும் அரபு நாடுகளிலிருந்து இலவசமாக கிடைக்கும்; பேரீச்சம் பழங்களுக்கு அரசாங்கம் வரி விலக்களிக்க வேண்டும் என்று கோரி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹீர் கடிதம் அனுப்பியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக் ஆகியோருக்கே அவர் செவ்வாய்க்கிழமை (10) கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'இவ்வருட நோன்பு அடுத்த மாதம் ஆறாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், நோன்பு காலத்தை முன்னிட்டு சவூதி அரேபியா மற்றும் அரபு நாடுகளிலுள்ள தனவந்தர்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், பொதுநல அமைப்புகள் என்பன நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள், அரபுக் கலாசாலைகள், குர்ஆன் அரபு மதரஸாக்கள் மற்றும் வசதி குறைந்த முஸ்லிம்களுக்கு இலவசமாக பேரீச்சம் பழங்கள் வழங்கப்பட்டுள்ளதால் தற்போதைய வரி அதிகரிப்பின் காரணமாக அதைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'கடந்த நோன்பு காலத்தில் பள்ளிவாசல்களுக்கு இவ்வாறு கிடைத்த பேரீச்சம் பழங்களை வழங்கி, அவற்றின் ஊடாக முஸ்லிம்களுக்கு அவை இலவசமாக வழங்கப்பட்டு நோன்பு நோற்கப்பட்டது. கடந்த அரசாங்கம் நோன்பு காலத்தில் வழங்கப்படும் பேரீச்சம் பழங்களுக்கு வரி விலக்களித்திருந்தது. ஆனால், தற்போதைய வரி விதிப்புக் காரணமாக இலவசமாக முஸ்லிம்களுக்கு வழங்கப்படவுள்ள பேரீச்சம் பழங்களை பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில், கூடுதலான பணம் கொடுத்து பேரீச்சம் பழங்களை பெறுவதைவிட அதனை உள்நாட்டில் பெற்றுக் கொள்ளலாம்.
எனவே, இந்த நல்லாட்சி அரசாங்கம் நோன்பு காலத்தில் மாத்திரம் சவூதி அரேபியா மற்றும் அரபு நாடுகளிலிருந்து இலவசமாக வழங்கப்பட்டுள்ள பேரீச்சம் பழங்களுக்கு வரி விலக்களித்து முஸ்லிம்கள் நோன்பைச் சிறப்பாக நோற்க வழிசெய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்' என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 minute ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
4 hours ago
7 hours ago