2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'நிலையான தீர்வுக்காக செயற்படவேண்டும்'

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

நிலையான அரசியல் தீர்வை நோக்கிச் செல்லக்கூடிய நிலையில் தமிழ் மக்கள் செயற்பட வேண்டுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

நாவிதன்வெளி 15ஆம் கிராமம் வள்ளுவர் பாலர் பாடசாலை மாணவர்களின் விடுகை விழாவும் பரிசளிப்பு விழாவும்  திங்கட்கிழமை (30) மாலை 15ம் கிராம பல்தேவைக்கட்டட மண்டபத்தில் நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் உரையாற்றிய அவர், 'ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்குப் பின்னரும் எந்த மாற்றமும் ஏற்படவில்லையென்ற சோர்வான நிலையில் எமது மக்கள் இருக்கின்றனர். ஆனால், எமது பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளன. எமக்கான நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை எங்களின்  ஜனநாயக ரீதியான போராட்டத்தை தொடர்ந்துகொண்டிருப்போம். அதற்கு எமது மக்களும் துணையாக இருக்கவேண்டும்' என்றார்

'கடந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பல தடைகளைச் சந்தித்து கல்வியில் வளர்ச்சி காணதவர்களாக இருக்கின்றோம். இந்நிலையில், தமிழர்களின் கல்வி வளர்ச்சியை முன்னேற்றுவதில் நாம் பின்னிக்கக்கூடாது. இந்நாட்டில் தமிழ்ச் சமூகம் பல இழப்புகளை சந்தித்தது. அவ்வாறிருந்தும் கல்வியில்  நம்பிக்கை கொண்டவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X