Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மார்ச் 04 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
ஒரு மில்லியன் பெண்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி அடைய அதிகாரத்தை வழங்கச் செய்தல் என்பதை மையமாக கொண்டு இம்முறை சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளதாக ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.
அம்பாறையில் நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டங்கள் தொடர்பாக புதன்கிழமை (02) நடைபெற்ற விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாடு முழுவதும் ஒரு மில்லியன் பெண்கள், கைத்தொழில் அமைச்சின் ஊடாக தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதனூடாக தேசிய பொருளாதாரத்தை உயர்த்த முடியும்.
1931இல் இருந்து பெண்களுக்கு ஒரு சரியான மற்றும் நிரந்தர பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய முடியாது போனதை நினைவு கூர்ந்த அமைச்சர் சமீப ஆண்டுகளில் பெண்கள் உரிமைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் கூறினார்.
இதற்கிடையில், பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி பல தடைகளை ஏற்படுத்திகாலும், நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் மற்றும் உள்ளூர் அரசாங்க நிறுவனங்களின் பெண்கள் இருபத்தைந்து சதவீதம் இருப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், அம்பாறையில் நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினத்தன்று பல்வகையிலும் தங்களது திறமைகளை வெளிகொண்டு வந்த பெண்கள் பலர் விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
6 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
2 hours ago
2 hours ago