2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பெண்களை விவசாயத்தில் ஊக்கப்படுத்த நடவடிக்கை

Niroshini   / 2016 மே 14 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு,ரீ.கே.றஹ்மத்தல்லா

இலங்கை பூராகவும் பத்து இலட்சம் பெண்களை தெரிவு செய்து அவர்களை விவசாயத்தில் ஊக்கப்படுத்த தமது அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் பி.தயாகமகே தெரிவித்தார்.

அம்பாறை, திருக்கோவில் குடிநிலக் கிராமத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் குடிநிலம் சுனாமி வீட்டுதிட்ட கிராமத்தில்  இடம்பெற்ற 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான பல்தேவை கட்டத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது,

வெளிநாடுகளில் இருந்து அதிக வருமானத்தை இலங்கைக்கு ஈட்டித்தரகூடிய ஏற்றுமதி பொருட்களான ஏலம்,கறுவா,மஞ்சள் மற்றும் இஞ்சி போன்ற பொருட்களை எமது அமைச்சின் ஊடாக 10 இலட்சம் பெண்களை தெரிவு செய்து அவர்களின் மூலம் பயிரிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.

இவ்வாறான பயிர்களை பயிரிடுவதன் மூலமாக குறிகிய காலமான ஒன்பது மாதங்களில் இலாபங்களை பெறக்கூடியதாக இருக்கும்.இதன் ஊடாக பெண்களின் வருமானத்தை அதிகரிப்பதுடாக நாட்டின் பொருளாதாரத்தினையும் அதிகரிக்க முடியும்.

இதனடிப்படையில் கிராமங்களில் ஐந்து பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு 75 பேர் ஒன்றினைந்த வகையில் இந்த பயிர்ச் செய்கையை அமைச்சு முன்னெடுக்க எதிர்பார்த்து இருக்கின்றது.இதற்கான பயிர்களை இலகுவாக பெற்று தருவதுடன் அறுவடை பின்னர் உற்பத்திகளை ஏற்றமதி செய்வதற்கான வசதிவாய்ப்புக்களையும் நாம் ஏற்படுத்து தருவோம்.

எனவே ஆர்வம் உள்ள பெண்கள் தமது அமைச்சுடன் இணைந்து இந்த ஏற்றுமதி பயிர்களை பயிரிடவதற்காக முன்வருமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X