Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூன் 30 , மு.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா, றியாஸ் ஆதம், ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை, பொத்துவில் உப கல்வி வலயப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் அவ்வலயத்துக்கு 46 ஆசிரியர்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
இந்நிலையில், கல்முனை வலயப் பாடசாலைகளில் மேலதிகமாக உள்ள ஆசிரியர்களில் 46 பேரை அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளுக்கு இடமாற்றவுள்ளதுடன், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, கோட்டப் பாடசாலைகளிலிருந்து 46 ஆசிரியர்களை பொத்துவில் உப வலயப் பாடசாலைகளுக்கு இடமாற்றவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த இடமாற்ற நடவடிக்கை ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
பொத்துவில் உப கல்வி வலயப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோவின் தலைமையில் அவரது அலுவலகத்தில் புதன்கிழமை (29) நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பொத்துவில் உப கல்வி வலயத்தில் உள்ள 20 பாடசாலைகளில் 77 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதுடன், இவ்வெற்றிடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்குமாறு மாகாண ஆளுநரிடம் மாகாண சபை உறுப்பினர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அத்துடன், பொத்துவில் பிரதேசத்துக்கான தனியான கல்வி வலயம் அமைப்பதிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளதையும் மாகாண சபை உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பொத்துவில் மற்றும் கல்முனை (மத்தி) ஆகிய புதிய கல்வி வலயங்களை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கையை கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி மேற்கொள்வதுடன், கிழக்கு மாகாண அமைச்சரவைக்கு விசேட அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கவும் இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago