Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 நவம்பர் 22 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
பொத்துவில் பிரதேசத்துக்கு தனியான கல்வி வலயம் ஒன்றை உருவாக்குவதற்கு தன்னாலான முயற்சிகளை முன்னெடுப்பேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேசத்துக்கான தனியான கல்வி வலயத்தினை வலியுறுத்;தி அப்பிரதேச மக்களால் அண்மைக்காலமாக விடுக்கப்பட்டு வரும் கோரிக்கை தொடர்பில் இன்று மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பையிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இக்கிராமம் கடந்த யுத்த சூழ்நிலையினாலும் மற்றும் இயற்கை அனர்த்தங்களினாலும் அதிகம் பாதிக்கப்பட்டு அப்பிரதேச மக்களின் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு என அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வந்தது.
இந்நிலையில் இப்பிரதேசம் கல்வித்துறையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் தேசிய காங்கிரஸின் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு பொத்துவிலுக்கான கல்வி உப வலயத்தினை உருவாக்கி நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
பொத்துவில் வலயத்துக்கான உப கல்வி வலயம் உருவாக்கப்பட்டு குறுகிய காலத்தினுள் அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள மூன்று கோட்டங்களில் பொத்துவில் கோட்டம் கல்வியில் இரண்டாவது தரத்தினை பெற்றிருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.
எமக்கு கிடைத்த அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி பொத்துவில் பிரதேசத்துக்கான வீதிகள், பாடசாலைகள், குளங்கள், விவசாயப் பாதைகள், வாய்க்கால்கள், வாழ்வாதார உதவிகள் என பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளோம்.
மேலும், இப்பிராந்தியத்துக்கான தனியான கல்வி வலயம் ஒன்றினை அமைத்துக் கொடுக்கும் வரை அதற்கான எனது முயற்சி தொடரும் எனவும் அதற்காக எனக்கு கிடைக்கின்ற அரசியல் அதிகாரத்தினை முழுமையாகப் பயன்படுத்தி அழுத்தம் கொடுப்பேன் எனவும் தெரிவித்தார்.
14 minute ago
23 minute ago
46 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
46 minute ago
49 minute ago