Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஜூலை 02 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
“போதைப்பொருள் சிற்றுண்டி வடிவத்திலும் கஞ்சா போன்றவை தேநீர் வடிவத்திலும் நமது பிரதேசத்தில் விற்பனை செய்யப்படுவதாக அறிய முடிகின்றது. இச்செயற்பாடு நமது சமூகத்தில் பாரதூரமான விளைவை ஏற்படுத்தும். ஆகவே அவற்றை கண்டறிந்து கட்டுப்படுத்த வேண்டியது நமது ஒவ்வொருவருடைய தலையாய கடமையாகும்” என ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.
போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் வியாழக்கிழமை(30) இடம்பெற்ற அலுவலக உத்தியோகத்தர்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“அண்மைக்காலமாக போதைப்பொருள் விற்பனையாளர்கள் பல்வேறு உத்திகளை கையாண்டு புதிய புதிய வடிவங்களில் போதைப்பொருட்களை விற்பனை செய்கின்றனர். அதிகமாக பாடசாலை சூழல்களிலும் அதேபோன்று இளைஞர், யுவதிகளையும் அவர்கள் அதிகமாக குறிவைத்துள்ளதையும் அறிய முடிகின்றது. அதற்காக அவர்கள் சிறிய சிறிய பெட்டிக்கடைகளை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆகவே அவற்றிலிருந்து எமது மாணவர்களையும் மக்களையும் காப்பாற்றும் பணி எம்மைப் போன்ற அரச உத்தியோகத்தர்களுக்கும் உள்ளது என்பதை அறிந்து செயற்பட வேண்டும்” என்றார்.
“போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை இனங்கண்டு அவர்களுக்கான ஆலோசனை வழங்குங்கள். அதேபோன்று போதைப்பொருள் விற்பனையாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான மாற்று தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுங்கள். போதைப்பொருள் நம்மை மட்டுமன்றி நமது சமூகத்தையும் அழித்துவிடும் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.
இந்த அரசாங்கம் போதைப்பொருளை ஒழிப்பதற்கான பல்வேறு பட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அவ்வாறான செயற்பாடுகளுக்கு நாமும் சேர்ந்து தோள்கொடுத்து ஒத்துழைப்போமானால், நமது பிரதேசத்தில் மட்டுமன்றி முழு நாட்டையும் போதைப் பொருளற்ற நாடாக மாற்ற முடியும் என்பதை மனதில் கொண்டு செயற்படுங்கள்” எனவும் தெரிவித்தார்.
இக்கருத்தரங்கில், உதவிப்பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.சசீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .