Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
“கைது செய்யப்படவேண்டிய விடுதலைப் புலிகளின் முக்கிய புள்ளிகள் வெளியில் உல்லாசமாக வாழ்க்கை நடத்த, புனர்வாழ்வு பெற்ற போராளிகள் கைது செய்யப்படுவது எந்தவிதத்தில் நியாயமாகும்” என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கேள்வி எழுப்பினார்.
முன்னாள் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக செயற்பட்டு புனர்வாழ்வுபெற்று தனது வீட்டில் வாழ்ந்து வந்த ராம் கைது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து போராடி இறுதியில் தனது குடும்பத்தினையும் இழந்து, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளியான தளபதி ராமினுடைய கைது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு நிகழ்வாகும். அவரது கைதானது ஒரு மனித உரிமை மீறலாகும். இது ஒட்டு மொத்த புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் இளைஞர், யுவதிகளை ஒரு கணம் திகைப்பில் ஆழ்த்தியிருக்கின்றது.
நல்லாட்சி என்று கூறும் இந்த ஆட்சிக் காலத்திலும் மஹிந்த ஆட்சியில் நடந்ததைப் போன்ற இவ்வாறான செயற்பாடுகள் தொடருமாக இருந்தால் மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்து புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் அனைவரும் அச்சமானதும், மன அழுத்தத்திற்கு உள்ளாகும் துர்ப்பாக்கிய சூழ்நிலை உருவாகும்.
இதனால் அவர்களது குடும்ப வாழ்க்கையை சரியான ஒரு நீரோட்டத்திற்குள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும்.
ஆகவே, அரசாங்கம் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு புதிய வாழ்க்கைக்குள் தங்களை உட்படுத்தி வாழ்ந்து வரும் முன்னாள் போராளிகளை கைது செய்வதனை தவிர்த்து, கைது செய்து புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படவேண்டிய பாரிய குற்றங்களை செய்து விட்டு நல்லவர்கள் போன்று தங்கள் குடும்பங்களுடன் உல்லாசமாக திரியும் முக்கிய புள்ளிகளை உடனடியாக கைது செய்து, அவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்” என்றார்.
“இந்த நாட்டில் ஏற்பட்ட அசௌகரிய நிகழ்வுகளினால் இங்கு வாழ முடியாமல் வெளிநாடுகளில் தங்களது குடும்பங்களுடன் வாழ்ந்து வருகின்ற உறவுகள் மீண்டும் இங்கு வருவதற்கு இவ்வாறான கைதுகள் அவர்களிடையே அச்சத்தையும் கேள்விக்குறியையும் உருவாக்கும்” எனவும் அவர் தெரிவித்தார்.
1 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
7 hours ago