2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'பிள்ளையின் கல்வியில் கரிசிலணையுடன் செயற்பட வேண்டும்'

Niroshini   / 2016 ஜனவரி 03 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா,-ஐ.ஏ.ஸிறாஜ்

பெற்றோர்கள் தங்கள் பிள்ளையின் கல்வியில் கரிசிலணையுடன் செயற்படும் போதுதான் எதிர்காலத்துக்குத் தேவையான சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும் என கிழக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ, சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்தார்.

பாலமுனை சமூக பொருளாதார கல்வி அபிவிருத்தி சங்கத்தின் முன்பள்ளி பாடசாலைகளின் வருடாந்த விளையாட்டு விழா சனிக்கிழமை (02) மாலை பாலமுனை அல்- ஹிக்மா விளையாட்டு மைதானத்தில் சமூக பொருளாதார கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் பி.முஹாஜிரீன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

சிறுவர்கள் உடல், உள, அறிவு ரீதியாக பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் நாட்டிலுள்ள சகல தரப்பினரும் இவர்களைப் பாதுகாத்து, நாளைய உலகின் வெற்றியாளர்களாக மாற்ற வேண்டும்.

ஒரு பிள்ளையின் கல்வியின் அடித்தளமாகவும் மெய்த்திறன் கூடிய மாணவர்களை உருவாக்கும் இடமாகவும் முன்பள்ளி காணப்படுகின்றது.

அந்தவகையில், கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளிகளை அபிவிருத்தி செய்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை வழங்குவதற்கு மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

சிறுவர்களின் பாதுகாப்பில் அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் நாமும் சிறுவர்களின் பாதுகாப்பில் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.

மேலும் இப் பிரதேசத்தில் கல்வி, சுகாதாரம் போன்ற பௌதிக வளங்களை அபிவிருத்தி செய்வதற்கு இவ்வருடம் கூடுதலான நிதியினை ஒதுக்கீடு செய்யவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளேன். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X