Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Princiya Dixci / 2016 ஏப்ரல் 10 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். ஜமால்டீன்
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டும் என லங்கா சமசமாஜக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசங்களில் ஆதரவாளர்களைச் சந்தித்து கலந்துரையாடும் நிகழ்வில் நேற்று சனிக்கிழமை (09) கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சந்திர சேகர பிரதீப் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
'நமது நாட்டை கட்டியெழுப்பவேண்டுமாயின் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயற்படுவதன் மூலமே நாடு முன்னேறும். கடந்த ஆட்சியில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கினோம். யுத்தத்தை வெற்றி கொண்டார். அதன் போது அவருக்கு ஆதரவாக இருந்தோம். அதற்குப் பிறகு இனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைத்து விட்டார்.
அளுத்கம பிரதேசத்தில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டபோது அதற்கு நடவடிக்கை எடுக்காமல் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை சீர்குலைத்து விட்டார்.
அதனால் லங்கா சமசமாஜக் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் திஸ்ஸவிதாரண மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கத்தக்கதாக கட்சியின் பெரும்பகுதியினராகிய நாங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கி ஆட்சியில் அமர்த்தியுள்ளோம் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று சம்மாந்துறை, அட்டாளைச்சேனை பாலமுனை பிரதேசத்துக்கும் சென்று மக்களை சந்தித்து மக்கள் எதிர்நேக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடி உள்ளனர்.
இந்நிகழ்வில் கட்சி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
20 May 2025