2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'மதங்கள் அன்பையும் கருணையையும் ஒழுக்கத்தையும் போதிக்கின்றன'

Niroshini   / 2015 நவம்பர் 01 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

சகல மதங்களும் அன்பையும் கருணையையும் ஒழுக்கத்தையும் போதிக்கின்றன. ஆனால் சில தீவிரவாத சக்திகள் பொதுமக்கள் மத்தியில் வெறுப்பை வளர்க்கின்றது என அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்   ஏ.எல். ஹாசீம் தெரிவித்தார்.

'மூன்று இனங்களும் வாழும் முன்மாதிரியின் பூமி' எனும் தொனிப் பொருளில் அம்பாறை மாவட்டத்தில் மதங்களிடையே சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அதன் ஒரு கட்டமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் மத புரிந்துணர்வுடன் சகவாழ்வை கட்டியெழுப்புவதற்கான நிகழ்வு அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (31) அம்பாறை மாவட்டவளவாளரும் அந்நூர் மfh வித்தியாலய அதிபருமான ஏ.எல்.கே. முஹம்மட் தலைமையில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி அன்பும் கருணையும் நிறைந்தவர். அவர் தலையிலான நல்லாட்சியில் இவ்வாறான சகவாழ்வு நிகழ்வுகள் நடைபெறுவது வரவேற்கத்தக்கதாகும்.

மாணவர்கள் மத்தியில் இவ்வாறான வேலைத் திட்டங்களை முன்கொண்டு செல்வதால் எதிர்காலத்தில் இன உறவுகள் வலுப்பெறுவதோடு மாணவர்களிடத்தில் சகோதரத்துவ மனப்பாங்கும் ஏற்படுகின்றது.

எமது நாடு சகல துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருகின்ற போதிலும் இவ்வாறான ஒன்று கூடல்கள் மற்றும் கருத்தரங்குகள் இடம்பெறுகின்றமையும் தற்போது எமக்கு தேவையான ஒன்றாக இருக்கின்றது.

இதனை எற்பாடு செய்து முன்னெடுத்துச் செல்கின்ற செயலனியினருக்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

இந்நிகழ்வில், கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.சி. கஸ்ஸாலி, தீகவாப்பி பரிவரி சைத்தியவைச் சேர்ந்த வணக்கத்துக்குரிய போதிவல சந்தானந்த தேரர், மஹியங்கனை, பங்கரகம நூரி அரபுக் கல்லூரியின் பிரதி அதிபர் அன்சார் அலாவுடீன், திராய்க்கேணி ஸ்ரீ கித்திவினாயர் ஆலயகுருக்கள் யோகேஸ்வரன், அம்பாறை மாவட்ட மத சகவாழ்வு வளவாளர்களான ஐ.எல். ஹாசீம், கசுன், றம்சி மௌலவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X