Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 05 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவிருந்த அபிவிருத்திப் பணிகள் பல திட்டமிடப்பட்ட முறையில் தடுக்கப்பட்டு,தமிழ் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தம் நிறுத்தப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.
அம்பாறை, திருக்கோவில் பிரதேச வைத்தியசாலையின் அவசரச் சிகிச்சைப் பிரிவின் திறப்பு விழா புதன்கிழமை(04) மாலை நடைபெற்றது.இதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
சுகாதார சேவையென்பது ஒரு இனத்துக்காகச் செய்யப்படுகின்ற சேவையல்ல. இது ஒரு மனிதாபிமான சேவையாகும். இத்துறையில் ஆட்சியாளர்கள் இன துவேசம் காட்டுவது மனிதத் தன்மைக்கு புறப்பான செய்பாடாகும் என்றார்.
மேலும்,தமிழ் மக்கள் வாழ்கின்ற கிராமங்களில் சுகாதார சேவைகள் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றன.இதனை கண்டுகொள்ளாமல் கடந்த ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு துரோகங்களை இழைத்துள்ளனர்.
தற்போதைய மாகாணம் மற்றும் மத்திய அரசின் ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கும் சேவையாற்ற முன்வர வேண்டும்.இதனைச் செய்வார்கள் என்ற பேரவாவுடன் தமிழ் மக்கள் காத்திருக்கின்றனர் எனவும் அவர் மேலம் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago