2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'மு.கா தலைவருக்கு எதிராக பேரினவாத சக்திகளால் பல குற்றச்சாட்டுக்கள்'

Niroshini   / 2016 மார்ச் 01 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அண்மைக் காலமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருக்கு எதிராக பேரினவாத சக்திகளால் பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வரும் இவ்வேளையில், மீண்டும் ஒரு குற்றச்சாட்டை சில தீயசக்திகள் சுமத்தியுள்ளன என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார வேலைவாய்ப்புத்துறை செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.தவம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று (01) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான  ரவூப் ஹக்கீம் கடந்த கால ஆட்சியில் நீதி அமைச்சராக இருந்து அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட செலவீனத்துக்கு அமைச்சரவை அங்கீகாரமில்லை என்ற போலியான குற்றச்சாட்டு  சுமத்தப்பட்டது.  அவை அடிப்படையற்றதாகும்.

அதற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது என்பதை அறியாமல் மேற்சொன்னவை திட்டமிடப்பட்ட குற்றச்சாட்டாகும். இவ்வாறான சேறுபூசும் நடவடிக்கைகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவரும் வரலாற்றில் பல தடவை நெஞ்சி நிமிர்த்தி நின்று முகம் கொடுத்துள்ளனர் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X