2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'மாணவர்கள் சுதந்திரமாகச் செயற்பட இடமளிக்கவேண்டும்'

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

மாணவர்கள் சுதந்திரமாகவும் தன்னிச்சையாகவும் செயற்படுவதற்கு இடமளிக்கவேண்டும். அவர்களின் விருப்பு, வெறுப்புகளை பெற்றோராகிய நாம் அறிந்து செயற்பட முயற்சித்து நடப்பதன் மூலம் பிள்ளைகளின்  கற்றல் நடவடிக்கைகளை உயர்த்த முடியுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் விவகார தொழில் வாய்ப்புத்துறைச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எ.எல்.தவம் தெரிவித்தார்.

றோயல் பராமரிப்பு நிலைய முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த விடுகை விழா இன்று திங்கட்கிழமை பாடசாலைக் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'எமது நாட்டில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சீருடைக் கட்டுப்பாடு, கல்வி பயில்வதில் கட்டுப்பாட்டு, ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனியான மேசை, கதிரை ஒதுக்கப்பட்டு அவர்கள் தங்களின் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும்போது தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்துகொண்டு செயற்படவேண்டுமென பல கட்டுப்பாடுகளின்; மத்தியில் எமது நாட்டின் கல்வி நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இந்த நிலைமையை நாம் மாற்றியமைக்கவேண்டும்.

இன்றைய மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப கல்வியையும் ஆங்கிலக் கல்வியையும் கட்டாயம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற விடயத்தை அன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் பல சந்தர்ப்பத்தில் எடுத்துரைத்துள்ளார். அன்று அவர் சொன்ன விடயத்தை இன்று எல்லோரும் உணர்கின்றனர்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X