2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மாணிக்கக்கல் விற்கச் சென்ற இளைஞன் கடத்தல்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 05 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

மாணிக்கக்கல் ஒன்றை விற்பனை செய்ய முயன்ற 22 வயதுடைய இளைஞன் ஒருவரை,  இனந்தெரியாத குழுவினர் கடத்திச்சென்று அம்மாணிக்கக்கல்லை பறித்துவிட்டு அவ்விளைஞனை வீதியில் இறக்கிவிட்டுச் சென்ற சம்பவம் அம்பாறை நகரில் சனிக்கிழமை (04) இடம்பெற்றுள்ளது.

அம்பாறை நகரைச் சேர்ந்த குறித்த இளைஞன், புதையல் மூலம்; பெறப்பட்ட மாணிக்கக்கல்லை விற்பனை செய்வதற்காக அம்பாறை நகரை அண்டிய கடைக்கு அருகில் அம்மாணிக்கக்கல்லுடன் நின்றுள்ளார். இதன்போது, அங்கு இலக்கத்தகடு இல்லாத வெள்ளை நிற வான் ஒன்றில் வந்த மூன்று பேர், குறித்த இளைஞனைக் கடத்திச் சென்று அம்மாணிக்கக்கல்லை பறித்துவிட்டு குறித்த இளைஞனை இங்கினியாகலைப் பகுதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இந்தச் சம்பவம் தொடர்பில் அம்பாறை பொலிஸ் நிலையத்தில் குறித்த இளைஞர் முறைப்பாடு செய்துள்ளதைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X