2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளேன்'

Suganthini Ratnam   / 2016 ஜூன் 21 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

எதிர்வரும் நாட்களில் அம்பாறை நகரில் அல்லது கொழும்பில் பாரிய உண்ணாவிரத்தை முன்னெடுக்கவுள்ளதாக அண்மையில் அம்பாறை, திருக்கோவில் ரூபஸ்குளம் காட்டுப்பகுதியில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்த கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட் மனோஜ் பிரியந்த சிறிவர்தன தெரிவித்தார்.

கடந்த 20ஆம் திகதி பொலிஸ் தலைமை அதிகாரியுடனான சந்திப்புக்காக அழைப்பு விடுக்கப்பட்டு கொழும்பு பொலிஸ் தலைமைக் காரியாலயத்துக்கு தான்; மனைவி, பிள்ளைகளுடன் சென்றதாகவும் இதன்போது, தலைமை அதிகாரி யாழ்ப்பாணம் சென்றுள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், தன்னை எவரும் சந்திக்கவில்லை. சிறந்த தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்து தான் அங்கு சென்றதாகவும் இந்நிலையில், ஏமாற்றத்துடன் தான் வீடு திரும்பியதாகவும் இன்று செவ்வாய்க்கிழமை அவர் கூறினார். ஆகவே, மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அம்பாறை, திருக்கோவில் ரூபஸ்குளம் காட்டுப்பகுதியில் 1990ஆம் ஆண்டு 123 பொலிஸ் உத்தியோகஸ்தர்களை விடுதலைப் புலிகள் கடத்திச்சென்று கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவத்தின்போது தப்பிவந்த முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட் மனோஜ் பிரியந்த சிறிவர்தன, தனக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்குமாறு கோரி கடந்த 11ஆம் திகதி முதல் இரண்டு நாட்கள் தனது மனைவி, பிள்ளைகளுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், அம்பாறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.ஆர்.எல்.றணவீரவுடன் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்;ந்து கடந்த 12ஆம் திகதி இவர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டு, மேற்படி கலந்துரையாடலுக்காக சென்றிருந்தார்.

இவர், 1990ஆம் ஆண்டு கல்முனைப் பொலிஸில் சேவையாற்றியவர் ஆவார். அந்த ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி 123 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் விடுதலைப் புலிகளால் கடத்திச்செல்லப்பட்டு கஞ்சி;குடியாறு, ரூபஸ்குளம் காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்திலிருந்து குறித்த பொலிஸ் சார்ஜன்ட் மாத்திரம் தப்பியிருந்தார்.

காயங்களுடன் தப்பியோடி மீண்டும் கடமையில் உள்வாங்கப்பட்ட தன்னை 2003ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி  அரசியல் பழிவாங்கல் காரணமாக சேவையிலிருந்து இடைநிறுத்தியதாக குறித்த பொலிஸ் சார்ஜன்ட் உண்ணாவிரதத்தின்போது தெரிவித்திருந்தார். தன்னைப் பணியிலிருந்து இடைநிறுத்தியமை தொடர்பாக மீள்பரிசீலனைக்காக விண்ணப்பித்தும், இதுவரையில் தனக்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X