Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஜனவரி 01 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ்
இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சிகளை தொடர்வதற்காக விண்ணப்பித்த இளைஞர், யுவதிகளுக்கான நேர்முகப் பரீட்சை ஜனவரி 04ஆம் திகதி முதல் 08ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதாக நிந்தவூரிலுள்ள மாவட்ட அலுவலகம் அறிவித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள 11 தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு ஆர்வமுள்ளோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கமைய முழுநேர பயிற்சிகளுக்காக விண்ணப்பித்திருந்தோர் கீழ்வரும் தினங்களில் உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பயிற்சி நிலையங்களுக்குச் சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதன்படி அக்கரைப்பற்று தொழிற்பயிற்சி நிலையத்திலுள்ள 03 பயிற்சிகளுக்காக விண்ணப்பித்த இளைஞர், யுவதிகளுக்கு ஜனவரி 04ஆம் திகதியும் சம்மாந்துறை பயிற்சி நிலையத்தின் 12 கற்கைகளுக்கு விண்ணப்பித்தோருக்கு 05ஆம் 06ஆம் திகதிகளிலும் சாய்ந்தமருது நிலையத்திலுள்ள 03 பயிற்சிகளை தொடர விண்ணப்பித்தோருக்கு 5ஆம் 7ஆம் திகதிகளிலும் நேர்முகப் பரீட்சைகள் இடம்பெறும்.
அத்துடன் நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையம் (9 கற்கைகள்), ஆலையடிவேம்பு (2 கற்கைகள்) மற்றும் மத்தியமுகாம் (5 கற்கைநெறிகள்) ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் நடத்தப்படும். பயிற்சிகளுக்கான விண்ணப்பதாரிகளுக்கு ஜனவரி 06ஆம் திகதியும் திருக்கோவில் பயிற்சி நிலையத்தின் 04 பயிற்சிநெறிகளுக்கு 07ஆம் திகதியும் காரைதீவு நிலையத்தின் 06 கற்கைகளுக்கு 07 மற்றும் 08ஆம் திகதிகளிலும் கல்முனை தொழிற்பயிற்சி நிலையத்தால் நடத்தப்படும் 04 பயிற்சிகளுக்கு 08ஆம் திகதியும் நேர்முகப்பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.
இது சம்பந்தமான அழைப்புக் கடிதங்கள் விண்ணப்பதாரிகளுக்கு தபாலில் அனுப்பப்பட்டுள்ளன. அக்கடிதங்கள் கிடைக்காதவர்களும் பொருத்தமான ஆவணங்களுடன் குறிப்பிட்ட தினத்தில் சமூகமளிக்கலாம் என்று மாவட்ட உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அவசியமேற்படும் பட்சத்தில், 0711211501 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நிகழ்ச்சிட்ட உத்தியோகத்தரை தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago