2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

'முன்னைய அரசு தமிழர்களின் காணிகளை அபகரித்துக் கொண்டது'

Niroshini   / 2015 நவம்பர் 21 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

கடந்த மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்கு எனும் போர்வையில் தமிழ் மக்களின் காணிகள் அபகரித்துக் கொள்ளப்பட்டுள்ளd.இந் நிலைமை தற்போதும் தொடர்வதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றது.இதற்கு நாம் ஒரு போதும் இடம்கொடுக்கமாட்டோம் என தமிழ்j; தேசியf; கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நேற்று பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தலைமையில் நடைபெற்ற பொது மக்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி கருத்தினை அவர் தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எமது மக்கள் காணிகளின்றி கஷ்டப்படும் நிலைமையில் எல்.எல்.ஆர்.சீ எனும் போர்வையில் பரம்பரை,பரம்பரையாக 30,40வருடங்களாக விவசாயம் மற்றும் குடியிருப்புக் காணிகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த ஆயிரக்கணக்கான காணிகள் பரிமுதல் செய்யப்பட்டதுடன் தற்போதும் இடம்பெற்று வருகின்றன..இந் நிலைமைகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டிய விடயமாகும்.

ஏழைகளின் காணிகளை பறித்து முதலாளி வர்க்கத்தினர்களுக்கு கொடுக்கப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதனை விடுத்து எமது மக்களின் காணிகள் எமது மக்களிடமே வழங்கப்பட வேண்டும்.நான் கிழக்கு மாகாண சபையில் இருக்கும் வரையில் தமிழ் மக்களுக்கான இந்த துரோகச் செயலுக்கு இடமளிக்கமாட்டேன்.

இது மட்டுமல்ல மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில் தொல்பொரு பிரதேசம் எனக் தெரிவித்து எமது காணிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் ஆலயங்களும் உடைக்கப்பட்டு அவரின் சகாக்கள் புதை பொருட்கள் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.இவ்வாறு எமது தமிழ் மக்களை ஏதோ ஒரு வழியில் துன்பப்படுத்திக் கொண்டு இருந்த மஹிந்த அரசுக்கு முற்றுப்புள்ளி வைத்து இன்று மைத்திரிபால சிறிசேனாவில் நல்லாட்சி நடக்கின்றது.

இந்த நல்லாட்சியிலாவது தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும். இதனை அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .