2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'முறையாக சிகிச்சையை பெற்றுக் கொண்டால் பாதுகாப்பை பெற்றுக் கொள்ள முடியும்'

Niroshini   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

எச்.ஐ.வி. தொற்று நோய்க்கான சிகிச்சையை முறையாகப் பெற்றுக் கொண்டால் எயிட்ஸ் நோயிலிருந்து பாதுகாப்பை பெற்றுக் கொள்ள முடியும் என பாலியல் நோய்கள் கட்டுப்பாட்டுப் பிரிவின் வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம்.ஹாரீஸ் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் ஏ.எல்.அலாவுதீனின் வழிகாட்டலின் கீழ் பாலியல் நோய்கள் கட்டுப்பாட்டுப் பிரிவினால் ஆலையடிவேம்பு சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று(15) இடம்பெற்ற எச்.ஐ.வி., எயிட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கையில் இது வரை எயிட்ஸ் நோயினால் 405 ஆண்களும் 182 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.1981ஆம் ஆண்டிலேயே இந்த நோய் பற்றி அறியப்பட்டது.இலங்கையில் 1985ஆம் ஆண்டில் இந்நோய் கண்டறியப்பட்டது.

எச்.ஐ.வி.ஒருவரை மிக இலகுவாக கண்டறிய முடியும்.இந்த நோய் பற்றி ஆரம்பத்தில் அறிந்து கொள்ள முடியாததன் காரணமாகவே, பலருக்கு தொற்றுவதற்கான சந்தர்ப்பம் அதிகம் ஏற்படுகின்றனது. இதன் தாக்கத்துக்குள்ளான ஒருவருக்கு ஆரம்பத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொண்டே செல்லும்.

தற்போது எச்.ஐ.விக்கான தடுப்பு மருந்துகள் உள்ளதனால் எயிட்ஸ் நோயிலிருந்து பாதுகாப்பை பெறமுடியும்.எனவே, எச்.ஐ.வி.யின் தாக்கத்துக்குள்ளான ஒருவருக்கு எயிட்ஸ் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட முடியாது என்ற தவறான விளக்கத்திலிருந்து நாம் முதலில் விடுபட வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X