Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் இந்நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் மூன்று மொழிகளையும் கற்றரியவேண்டும் என்ற கொள்கையை கொண்டிருந்தார்.
அதன் தாப்பரியத்தை அறிந்து எமது சமூகம் எதிர்காலத்தில் இந்நாட்டில் தலை நிமிர்ந்து நிற்பதற்கு இம் மும்மொழி அறிவு அவசியமென அறிவுறுத்தினார் என முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகப் பொதுச் செயலாளரும் மஜிலிஸ் ஸூராவின் பிரதித் தலைவருமான சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் தெரிவித்தார்.
மறைந்த தலைவரின் 15ஆவது வருடாந்த நினைவுகூரும் நிகழ்வும் துஆ பிரார்த்தனையும் நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் சுகாதார சுதேச பிரதி அமைச்சரும் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாப் பைசல் காசிம் தலைமையில் இடம்பெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
1980ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் கட்சியாக நாம் ஆரம்பித்த போது மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் முஸ்லிம்களின் அரசியல் விடிவுக்காகவும் விழிப்பூட்டுவதற்காகவும் பாடுபட்டார்.
அன்னார் உயர் கல்வியின் சிறப்பை உளரீதியாக உணர்ந்ததன் காரணமாகத்தான் தென் கிழக்கு பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவி பலரும் பயன்பெறவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவராகத் திகழ்ந்தார்.
அன்னாரின் மறைவுக்குப் பின் எமது கட்சியின் தலைமைப் பொறுப்பை மிகவும் காத்திரமாகவும் கச்சிதமாகவும் தியாக அர்ப்பணிப்புகளுக்கும் பல சவால்களுக்கும் மத்தியில் எங்களின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மறைந்த தலைவர் கண்ட அரசியல் அதிகாரக் கனவுகளை நனவாக்கிக் கொண்டு இந்நாட்டில் எல்லோரையும் அரவணைத்து செயற்பட்டு வருவது சிறப்பம்சமாகும் என்றார்.
30 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago