Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Suganthini Ratnam / 2016 மார்ச் 27 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்னிலையில் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் பிரஸ்தாபிப்பதற்கு மு.கா.வின் தலைமை தவறிவிட்டதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
அ.இ.ம.கா கட்சியின் புதிய கிளைகளை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு, சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் சனிக்கிழமை (26) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'அண்மையில் மு.கா அதன் தேசிய மாநாட்டை கோலாகலமாக நடத்தி முடித்ததாக அறிவித்துள்ளது. மாநாடு கோலாகலமாக நடந்தது உண்மையே. ஆனால், இந்த மாநாட்டினால் முஸ்லிம் சமூகத்துக்கு கிடைத்துள்ள நன்மை என்ன? கட்சி சாதித்தது என்ன?' எனக் கேள்வியெழுப்பினார்.
'இந்த மாநாட்டில் ஜனாதிபதியும் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் கலந்துகொண்ட நிலையில் அவர்களிடமிருந்து மு.கா தலைமை சமூகத்துக்காக எதைப் பெற்றுக்கொடுத்தது? அல்லது, பெற்றுக் கொடுப்பதற்காக முயன்றது என்ன? அவர்களிடம் விடுத்த வேண்டுகோள்கள் என்ன? என்ற கேள்விகளை எழுப்பினால் எல்லாவற்றுக்கும் ஒரே பதில் பூச்சியம்.
இந்த மாநாட்டின் மூலம் முஸ்லிம் சமூகத்துக்கு குறிப்பாக, கிழக்கு மாகாண மக்களுக்கு ஏதாவது நன்மை கிடைத்துள்ளதா? முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுவரப்படாத நிலையிலேயே இந்த மாநாடு முடிவடைந்தது' என்றார்.
'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் இந்த மாநாட்டு மேடையைப் பயன்படுத்தி தனது சமூகத்தின் தேவையை, எதிர்பார்ப்பை ஜனாதிபதியின்; முன்னிலையில் வலியுறுத்தியுள்ளார். ஆனால், மு.கா.வின் தலைவர் ரவூப் ஹக்கீம் என்ன செய்துள்ளார்? ஹக்கீமின் உரையில் முஸ்லிம் சமூகத்தின் தேவைகள்;, பிரச்சினைகள், அபிலாஷைகள் பற்றி எதிரொலித்ததா? என்று தேடிப் பாருங்கள்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில்; அரசாங்கத்தால் பறிக்கப்பட்டதாகக் கூறப்படும் காணியை மீட்டெடுப்பதில் தமிழ்த் தரப்பு மிக முனைப்புடன் செயற்படுகின்றது. ஆனால், காணிகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் சார்பாக கட்சித் தலைவர் என்ற ரீதியில் மு.கா தலைவர் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன?
அரசியல் யாப்பு சீர்திருத்தம் பற்றி பேசப்படும் இன்றைய காலப்பகுதியில் வடக்கையும் கிழக்கையும் மீண்டும் இணைக்க வேண்டுமென்ற ரீதியில் தமிழ்த்; தரப்பு கருத்துகளை முன்வைத்து காய்நகர்த்தலை மேற்கொள்கின்றது. கட்சித் தலைவர் என்ற ரீதியில் இந்த விடயத்தில்; ஹக்கீமின் நிலைப்பாடு என்ன?
கல்முனை கரையோர மாவட்டம், முஸ்லிம்களுக்கான தனி அலகு என்று தேர்தல் காலங்களில் முழங்கும் மு.கா தலைமை, இது பற்றிய தனது சரியான நிலைப்பாட்டை மாநாட்டு மேடையில் வெளியிட்டிருக்கலாமே. அது பற்றி பேசாமல் விட்டது ஏன்?' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago