2025 ஜூலை 03, வியாழக்கிழமை

யானைகளினால் மின்சாரவேலி சேதம்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

ஒலுவில், ஆலிம் நகர் பிரதேசத்திலுள்ள திண்மக்கழிவு சேகரிப்பு நிலையத்தை சூழவுள்ள மின்சாரவேலி செவ்வாய்க்கிழமை (28) நள்ளிரவு காட்டு யானைகளினால் சேதமாக்கப்பட்டுள்ளது.

கடந்த 05 மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால்;, இந்த மின்சார வேலிக்கு மின்சாரத்தை வழங்கிக்கொண்டிருந்த மின்பிறப்பாக்கி செயலிழந்திருந்தது. இதன் காரணமாக மின்சார வேலியை சேதப்படுத்தி யானைகள் உள்நுழைந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

மேலும், திண்மக்கழிவு அகற்றும் நிலையத்தில் யானைத்தடுப்பு மின்சார வேலிக்கு மின்சாரத்தினை வழங்கும் செயலிழந்த நிலையில் காணப்படும் மின்பிறப்பாக்கி இயந்திரத்தை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டுச் சென்றும், இதுகாலவரைக்கும் மின் பிறப்பாக்கி திருத்தம் செய்யப்படாத நிலையிலேயே காணப்படுவதாகவும் இந்நிலை தொடருமானால் காலப்போக்கில் மின்சார வேலி அனைத்தும் காட்டு யானைகளினால் சேதத்திற்குள்ளாக்கப்படும் நிலை  உருவாகும் என்றும் அங்குள்ள ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .