2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'யாப்பை மீறுகின்றவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை'

Niroshini   / 2016 ஜனவரி 18 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கட்சி யாப்பின் சரத்துக்களை மீறி ஒரு போலியான பேராளர் மாநாடு ஒன்றை நேற்று குருநாகலில் நடத்தியுள்ளார் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் இன்று (18) தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கட்சி யாப்பின் சரத்துக்களை மீறி பிழையான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு நான் எழுத்து மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தேன். இவ்வாறு அறிவித்திருந்தும் அவர் இந்த மாநாட்டை நடத்தியிருப்பது பாரிய தவறாகும்.

இதேபோன்றுதான் முன்பும் ஒரு தடவை கட்சியின் யாப்பை மீறி பிழையான முறையில் நடந்த அந்த விடயத்தில் அவர் தோற்றுப்போன விடயத்தையும் மக்கள் அறிவார்கள்.

நேர்மை என்பது ஒரு மனிதனின் அடிப்படையிலிருந்து வரவேண்டும். அப்படியில்லாதவர்கள் வாழ்க்கையில் வென்றாக வரலாறே இல்லை. ஆனால், தெப்பிராட்டியத்தை குணமாகக் கொண்டவர்கள் சில காலம் மக்களை ஏமாற்றலாம். ஆனால் எக்காலமும் ஏமாற்ற முடியாது. பொய்க்கும் அசத்தியத்துக்கும் மாற்றமாக நடந்து அவற்றை உண்மையாகவும் சத்தியமாகவும் மக்களுக்கு காட்ட முற்படுகின்ற முயற்சியும் நீண்ட காலம் பலிக்காது என்றார்.

மேலும்,கட்சியின் யாப்பை மீறுகின்றவர்களுக்கும் அதற்கு துணை போகின்றவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் தேவையான சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X