2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'வாசிப்பு ஒரு மனிதனை பூரண மனிதனாக மாற்றி அமைக்கும்'

Gopikrishna Kanagalingam   / 2015 நவம்பர் 09 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

வாசிப்பு ஒரு மனிதனை பூரண மனிதனாக மாற்றி அமைக்குமென பாலமுனை அல் ஹிதாயா வித்தியாலயத்தின் அதிபர் கே.எல்.உபைதுல்லா தெரிவித்தார்.

உள்ளூராட்சி தினத்தையொட்டி அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களை விழிப்பூட்டும் கருத்தரங்கு இன்று திங்கட்கிழமை பாலமுனை அல் ஹிதாயா வித்தியலயத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் செயலாளரும் பிரதம முகாமைத்துவ உதவியாளருமான எஸ்.எம். கலீலுர்றகுமான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலத்திரனியல் சாதனங்கள் மூலம் அறிவேடுகளை மிக விரைவாகவும் கூடிய அளவான அறிவுகளையும் பெற்றுக் கொள்ள முடியும். ஒரு மனிதன் அறிவைத் தேடிக் கற்கின்றாறோ அந்தளவுக்கு அவரது அறிவும் வளரும்.

விஞ்ஞானிகள், பெரியார்கள், சிறந்த அறிஞர்கள் மற்றும் உலகத் தலைவர்களின் சுயசரிதைகள் மற்றும் அவர்களின் ஆக்கங்களை வாசிப்பதன் மூலம் நாம் படைப்பாளியாகவும் கலாசார விழுமியங்களை சீராகப் பேணுபவராகவும் சமூகத்தை வழிநடத்தக் கூடியவனாகவும் மாற்றி அமைக்கின்றது.

எனவே, மாணவர்கள் நூலகத்தை முழுமையாக வாசிப்புக்கான ஓர் தளமாக பாவித்து பயன் பெறவேண்டுமென கேட்டுக் கொண்டனார்.

இந்நிகழ்வில் உள்ளூராட்சி மன்ற உத்தியோகத்தர் எம்.எஸ். றியால், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.எம். ஹாசிம், நூலகர்களான ஏ.சீ. அன்வர் சதாத், ஏ.எச். தௌபீக், பிரதி அதிபர் எம்.எம். கிபத்துல்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X