Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Niroshini / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை மாவட்டத்தில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அக்கரைப்பற்று, நுரைச்சோலை பிரதேசத்தில் சவூதி அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளையும் வழங்குவதற்கு கிழக்கு மாகாண சபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அம்பாறை மாவட்டத்தில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று, நிந்தவூர், சாய்ந்தமருது மற்றும் கல்முனை ஆகிய பிரதேச மக்களுக்காக சவூதி அரசாங்கம் பல கோடி ரூபாய் நிதியில் சகல வசதிகளுடனும் நுரைச்சோலை பிரதேசத்தில் நிர்மாணித்து கொடுத்துள்ள வீடுகளை, வழங்குவதற்கான நடவடிக்கைகளை கிழக்கு மாகாண சபை,மத்திய அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மெத்தானந்த சில்வாவினால் அண்மையில் கிழக்கு மாகாண சபையில் கொண்டு வரப்பட்ட தனிநபர் பிரேரணையில் தீகவாபி தொகுதியில் 233 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தவறானதாகும். தீகவாபி கிராமம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேசமாகும் என்றார்.
மேலும், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட இவ்வீடுகளை வழங்கும் விடயத்தினை சில இனவாதிகள் உயர் நீதிமன்றம் வரை கொண்டு சென்றுள்ளனர்.இதற்கமைய,காணிக் கச்சேரி வைத்து சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வீடுகளை வழங்குமாறு உயர் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
41 minute ago
50 minute ago
1 hours ago