Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
ஒருவொருக்கொருவர் விட்டுக்கொடுத்து புரிந்துணர்வோடு செயற்பட்டால்தான் அமைச்சரின் வேலைகளையும் அமைச்சரின் காரியாலய அன்றாட கடமைகளையும் மிக திறன்பட முன்னெடுத்துச் செல்லலாம் என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.மொஹமட் நஸீர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சரின் நிருவாக உத்தியோகத்தர்களுக்கான கூட்டம் நேற்று புதன்கிழமை மாலை திருகோணமலை சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
யார் எதைச் செய்தாலும் ஒரு விட்டுக்கொடுப்புத் தன்மை அங்கு இருக்கு வேண்டும். விட்டுக்கொடுப்புத்தன்மையில்லை என்றால் அங்கு எந்த வேலைகளும் சரிவர இடம்பெறாது. ஒரு நிருவாகத்தில் மிக அதிகமான பிரச்சினைகள் வருவதற்குக் காரணம் விட்டுக்கொடுப்புத் தன்மையில்லை, புரிந்துணர்வுத் தன்மையில்லை என்றுதான் என்னால் சொல்லமுடியும்.
இதற்கேற்றாப்போல் உங்களின் கடமைகள் அமைய வேண்டும். அமைச்சரின் ஒரு வேலையை செய்யும்படி ஒரு அதிகாரி பணித்தால் குறித்த வேலையை முதலில் செய்துவிடுங்கள். அதைவிட்டு விட்டு இந்த வேலையைச் செய்ய எனக்கு மட்டும்தான் கடமையா? என்று நினைத்து செயற்படக்கூடாது.
அதிகாரிகளினால் பணிக்கப்படுகின்ற எந்த வேலையாக இருந்தாலும் குறித்த வேலையை முதலில் செய்துவிடுங்கள். அதன் பின்னர் என்னிடம் நேரடியாக வந்து குறித்த விடயங்களை தெரிவித்து அதற்கான தீர்வினையும் பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் என்னைச் சந்திக்க யாரிடமும் அனுமதி பெற்று வரவேண்டிய அவசியம் இல்லை. இதற்கமைவாக தங்களின் கடமைகளை ஒவ்வொருவரும் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்றார்.
50 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago
3 hours ago