2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'விடிவுகள் கிடைக்காது போகுமானால் நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்போம்'

Niroshini   / 2016 மே 07 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மாத்திரம் கருசணை கொண்டு இந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுக்கின்ற ஒரு கட்சியாக நாம் இருக்கின்றோம்.


தமிழ் மக்களுக்கான உரிமைகள், விடிவுகள் என்று கிடைக்கப்படவில்லையோ அன்று இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி நல்லாட்சி அரசாங்கத்தை கீழே விழுத்தவதற்கு  தயாராகவே இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை, திருக்கோவில் விபுலானந்தா அகடமியின் ஏற்பாட்டில் பல்கலைகக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் இன்று 7ஆம் திகதி சனிக்கிழமை பிரதமஅதிதியாகக் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட குறைநிரப்பு பிரேரணையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை வழங்காது இருந்தால் இந்த நல்லாட்சி அரசாங்கம் சின்னாபின்னமாகியிருப்பதுடன் பல விமர்சனங்களையும் பெற்றுக்கொண்டு இருக்கும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தை நிமிர்த்திவிட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இந்த நல்லெண்ணத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமானால், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான செயற்பாடுகளில் கூடிய கருசணை காட்டவேண்டும்.

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் நோக்கில் தேசிய மற்றும் சர்வதேசிய ரீதியில் பல நாடுகள் சதித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி விடுதலைப் போராட்டத்தில் கூட அங்கிகரிக்கப்பட்ட ஒரு கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்து வந்துள்ளது. வேறு எந்த கட்சியும் இல்லை.

இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தான் இலங்கை தமிழர்களுக்கு மாத்திரமன்றி சர்வதேசத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு ஒரு விடிவு எட்டப்படும் ஒரு கொள்கையும் இல்லாது தற்போது புதிது புதிதாக முளைக்கின்ற எந்த அமைப்பினாலும் இதனை செய்ய முடியாது.

தமிழ் மக்கள் யுத்தத்தில் சிக்குண்டு வேதனைகளை அனுபவித்து வந்தபோது, கடந்த அரசாங்கத்துடன் இணைந்து வடக்கு, கிழக்கு பிரிவுக்கு ஆதரவு வழங்கி  கடந்த அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு பல அநீதிகள் இழைக்கப்பட்ட வேளையில், தங்களின் மக்களுக்கு ஆதரவாக செய்யப்படாது அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்பட்டுவிட்டு இன்று வடக்கு,கிழக்கு இணைய வேண்டும், தமிழர்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும் என போலியான கூக்குரல் இடுகின்றவர்களாக மாறியிருக்கின்றார்கள்.

இன்று டக்ளஸ் தேவானந்தா கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்கள் பற்றி எந்தவொரு சிந்தனைகளும் இன்றி சுகபோகமாக அரசியலில் வாழ்ந்தவர் இன்று எதுவும் முடியாத நிலையில் தமிழர்களின் உரிமைகள் பற்றி போலி கொக்கறிப்புக்களை செய்து வருகின்றார்.

தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளை சேர்த்துக் கொண்டு இன்று தமிழ் உரிமை பற்றி பேசுவதற்கு புறப்பட்டுள்ளார். இந்த போலிகளால் தமிழ் மக்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையும் ஒன்றும் செய்து விடமுடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக பல கட்சிகள் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பிக்கு எதிரா செயற்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை சிதைக்க சில பகல் கனவு காண்கின்றனர். இது ஒருபோதும் நடக்காது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைத்து அதன் ஊடாக தமிழ் மக்களின் உரிமைகளை பறித்துக் கொள்ளலாம் என தொடர்ச்சியாக பேரினவாத சக்திகள் செயற்பட்டு வருகின்றது. இதற்கு தமிழ் மக்கள் ஒரு போது இடம்கொடுக்கமாட்டார்கள். காரணம் கட்சியின் கொள்கைகள் மீதும் கட்சியின் தலைமைகள் மீதும் தமிழ் மக்கள் பற்றுருதி கொண்டவர்களாக காணப்படுகின்றார்.

இதற்கு ஏற்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களின் உரிமைகள் அபிவிருத்திகள் எவ்வாறு பெற்றுக் கொடுக்க வேண்டும் என உணர்ந்து செயலாற்றி வருகின்றது.

இந்த நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தை நிலைநிறுத்துகின்ற தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவினை பெற்ற பலம் பெற்ற கட்சியான கூட்டமைப்புதான் என்பதை இன்று யாரும் மறுப்பதற்கு இல்லை என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X