2025 மே 19, திங்கட்கிழமை

விண்ணப்பங்கள் கோரல்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

கிழக்கு மாகாண காணி நிர்வாகத் திணைக்களத்தைச் சேர்ந்த குடியேற்ற அலுவலகர்கள் மற்றும் வெளிக்களப் போதனாசிரியர்களுக்கு 2017ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றத்துக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக மாகாணக் காணி ஆணையாளர் டீ.டீ.அனுர தர்மதாச, இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

சேவை நிலையமொன்றில் குறைந்தபட்சம்  தொடர்ந்து 05 ஆண்டு காலம் சேவையாற்றியவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும். தொடர்ந்து 05 வருடங்களுக்கு குறைவாக சேவையாற்றியவர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் இடமாற்றசபை பரிசீலித்து முடிவெடுக்கும்.

மாகாண நிர்வாக எல்லைக்குட்பட்ட மாவட்டங்களில் 02 வருடங்களாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் சேவையாற்ற வேண்டுமென்ற விதிக்கமைய இந்த  இடமாற்றங்கள் இடம்பெறும்.

எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி இதற்கான விண்ணப்ப முடிவு திகதியாகும். இதற்கு முன்னர் உரிய விண்ணப்பப்படிவங்களை பூரணப்படுத்தி பிரதேச செயலாளர்களூடாக அனுப்பிவைக்க முடியும். மேன்முறையீடுகளை எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க முடியும்.

எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி இடமாற்ற விவரங்கள் வெளியிடப்படுமெனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X