Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூன் 27 , மு.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
கட்டார் நாட்டின் ஈதுல் கைரிய்யா நிறுவனத்தின் அனுசரணையுடன் சூடான் நாட்டில் புலமைப்பரிசில் வாய்ப்புடன் கலைமாணிப் பட்டப்படிப்பை பூர்த்தி செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அம்பாறை பாலமுனை ஜம்இய்யதுஸ் ஸஹ்வா அல் கைரிய்யா நிறுவனத்தின் அணுசரணையுடன்; இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இப்பட்டப்படிப்பு கற்கைநெறிகளில் மருத்துவம், மருந்தாளர், பொறியியல் சார்ந்த துறைகள், பல் மருத்துவம், விவசாயம், கால்நடை வளர்ப்பு, கால்நடை உற்பத்தி, நிர்வாகவியல், பொருளியல், கணக்கீடு, இரசாயனவியல், தாதியல், கதிரியக்கவியல், மொழிபெயர்ப்பியல், ஆசிரியர் பயிற்சி மற்றும் இஸ்லாமிய சட்டக்கலைகள் போன்ற துறைகளில் புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதுடவுள்ளதாக பாலமுனை ஜம்இய்யதுஸ் ஸஹ்வா அல் கைரிய்யா நிறுவத்தின் தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல். ஹாசிம் சூரி தெரிவித்தார்.
இக்கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிப்போர், இலங்கை வெளி விவகார அமைச்சு மற்றும் சூடான் தூதரகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட உயர்தர பெறுபேற்றுச் சான்றிதழைச் சமர்பிப்பதோடு, மருத்துவம் 90, பொறியியல் 85, ஏனையவை 75 மேற்பட்ட புள்ளிகள் பெற்றிருத்தல் வேண்டும். மாணவர்கள் தேக ஆரோக்கியமுடையவராக இருத்தல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 2016ஃ2015 ஆம் ஆண்டில் வெளியான பெறுபேறுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி 2016.07.01 என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தெரிவு செய்யப்படுபவர்களுக்கான கற்கைகள் 2016.09.01 முதல் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பட்டப்படிப்புக்காக விண்ணப்பிக்க விரும்பும் மேற்படி தகைமைகளையுடையோர் எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் தங்களுடைய ஆவணங்களை பூர்த்தி செய்து ஜம்இய்யதுஸ் ஸஹ்வா அல் கைரிய்யா (ஜெஸ்கா), தலைமைக் காரியாலயம், கடற்கரை வீதி, பாலமுனை எனுமு; முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் மேலதிக தகவல்களுக்கு 0775026546, 0772274547 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .