2025 மே 22, வியாழக்கிழமை

44 வைத்தியசாலைகளுக்கு உபகரணங்களும் தளபாடங்களும் வழங்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2016 மார்ச் 09 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழியங்கும் 44 வைத்தியசாலைகளுக்கு வைத்திய உபகரணங்களும் தளபாடங்களும் நாளை வியாழக்கிழமை வழங்கப்படவுள்ளன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக் காரியாலயத்தின் கீழியங்கும் தள வைத்தியசாலைகள் -03 மாவட்ட வைத்தியசாலைகள் -11, ஆரம்ப பராமரிப்பு பிரிவு வைத்தியசாலைகள் -12, விசேட வைத்திய சேவைப் பிரிவுகள் -05, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள் -13 ஆகியவற்றுக்கே தளபாடங்களும் வைத்திய உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரின் நிதியொதுக்கீட்டின் கீழ், 06 கோடி ரூபாய் செலவில் இவை வழங்கப்படவுள்ளன.

இவை வழங்கும் நடவடிக்கை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் காரியாலயக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக 44 வைத்தியசாலைகளின் வைத்திய பொறுப்பதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X