2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'வினைத்திறனுடனான சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'

Niroshini   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

நல்லாட்சி அரசாங்கத்தில், நாட்டிலுள்ள அரச துறைகளின் உற்பத்தித் திறனை அதிகரித்து மக்களுக்கு வினைத்திறனுடனான சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் எம். தம்பிஐயா தெரிவித்தார்.

அஞ்சல் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள உற்பத்தித் திறன் தொடர்பான பயிற்சி செயலமர்வு, அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அதிபர்களுக்கு இன்று (22) திங்கட்கிழமை மாளிகைக்காடு பிஸ்மில்லா மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அதிதியாக கலந்து கொண்டு உரையற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் அலுவலக பிரதம நிர்வாக உத்தியோகத்தர் யூ.எல்.எம். பைஸர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தபால் திணைக்களம் நவீன மயப்படுத்தப்பட்டு புதிய பரிணாமத்துடன் தொழில்நுட்ப ரீதியிலான மக்களுக்கு பயன்தரக் கூடிய வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

அதற்கு நாமும் ஒத்துழைப்பு வழங்கி மிகவும் சிறந்த முறையில் அவ்வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அப்போது தான், தபால் திணைக்களம் அதன் இலக்கை அடைவதோடு மக்களுக்கான சேவையையும் முன்னெடுத்து செல்ல முடியும்.

மக்களுக்கு சிறந்த சேவையை விரைவாகவும் திருப்தியுடனும் வழங்குவதற்கு உத்தியோகத்தர்களின் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X