2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

விழிப்புணர்வு ஊர்வலம்

Niroshini   / 2015 நவம்பர் 15 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.எ.காதர்,எம்.எஸ்.எம். ஹனீபா,ரீ.கே.றஹ்மத்துல்லா

'நீரிழிவு  நோயைக் கட்டுப்படுத்தி  ஓர் ஆரோக்கியமான வாழ்வை ஏற்படுத்துவோம்' என்ற தொனிப்பொருளில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றா நோய்ப் பிரிவு  ஏற்பாடு செய்த  உலக நீரிழிவு  தின விழிப்புணர்வு  ஊர்வலம் நேற்று சனிக்கிழமை கல்முனையில் நடைபெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.அலாவுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு  ஊர்வலத்தில் சுகாதார பிரதி அமைச்சர் எம்.சீ.பைஷல் காஸிம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு விழிப்புணர்வு  ஊர்வலத்தை ஆரம்பித்து வைத்தனர்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தொற்றா நோய்ப் பிரிவு  வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.ஆர்.எம்.ஹாரீஸ் உட்பட பலரும் கலந்து கொண்டதுடன் பொது மக்களை விழிப்பூட்டும் வகையில் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

இதேவேளை,'நாளைய மாற்றத்துக்கு இன்றே செயல்படுவோம்'எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று சனிக்கிழமை நிந்தவூரில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்திட்சகர் சகீலா இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில், வைத்தியர்கள் ,பாடசாலை அதிபர்கள் மற்றும் வைத்திசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .