Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Super User / 2012 ஜனவரி 16 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.ரம்ஸான்)
சாய்ந்தமருது 14ஆம் பிரிவு கிராம சேவகரான எம்.என்.எம்.சஜாவை கடந்த சனிக்கிழமை ஒரு குழுவினர் தாக்கியதாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடமை நிமித்தம் வீட்டை விட்டு வெளியே சென்ற போது மூன்று பேர் கொண்ட ஒரு குழுவினர் தன்னை தாக்கியதாகவும் குறித்த முறைப்பாட்டில் கிராம சேவகர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தாக்கியதாக குற்றஞ்சாட்டப்படும் குழுவிலிருந்த ஏ.ஜே.எம்.ஜவாத்தை குறித்த கிராம சேவகரான சஜா தாக்கியதாகவும் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த இவர்கள் இருவரும் கடந்த சனிக்கிழமை முதல் சிகிச்சைகளுக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்ட நிலையில், இன்று திஙகட்கிழமை வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், கிராம சேவகர் சஜா மீண்டும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கிராம சேவகர் சஜா தாக்கப்பட்டமை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ,எல்.எம்.சலீம் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேராவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
sameer Tuesday, 17 January 2012 03:34 AM
ஏன் இந்த கொலைவெறி.. சட்டம் தன் கடமையை செய்யும் என்று எதிர்பார்ப்போம். அநியாயம் இழைக்கப்பட்டவனுக்கு நீதி கிடைக்குமா?
Reply : 0 0
kulathooran Tuesday, 17 January 2012 04:36 AM
ஹரிஸ் எம்.பி.க்கு பாதகமான செய்திகளை தமிழ் மிரர் மின் அஞ்சலில் வெளியிடாதா?
Reply : 0 0
farhan Tuesday, 17 January 2012 05:07 AM
அரச சேவகருக்கே இந்த நிலைமையா?
Reply : 0 0
சாய்ந்தமருது 14 Tuesday, 17 January 2012 02:06 PM
அரச சேவகருக்கே பதுகாப்பு இல்ல, இது ஒரு கண்டிக்கப்படவேண்டிய செயலாகும். சகல கிராம சேவகர்கள் ஒன்றிணைத்து போராட வேண்டியது கட்டாயமாகும்.
Reply : 0 0
Jerry Tuesday, 17 January 2012 03:44 PM
சம்மந்த பட்டவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.. Where is the justice?
Reply : 0 0
kulathooran Tuesday, 17 January 2012 06:52 PM
அரசியல்வாதியின் தலையீடு சம்பந்தப்பட்டோர் கைதுக்கு தடையாக இருக்குமோ?
Reply : 0 0
obama Wednesday, 18 January 2012 07:15 PM
சட்டம் ஒரு இருட்டறை அதில் இது எம்மாத்திரம்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago