2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அம்பாறை மாவட்டத்தில் 16 அரசியல் கட்சிகளும் 18 சுயேட்சை குழுக்களும் போட்டி

Super User   / 2012 ஜூலை 19 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சி.அன்சார்)

"கிழக்கு மாகாண சபை தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக 16 அரசியல் கட்சிகள் மற்றும் 19 சுயேட்சை குழுக்கள் சார்பாக 35 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இவற்றில்  ஓரு வேட்புமனு நிராகரிக்கப்பட்டது" என அம்பாறை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்ட செயலாளருமான நீல் டி அல்விஸ் தெரிவித்தார். 

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தமிழரசுக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஜனசெத்த பெரமுன, ஐக்கிய சோசலிசக் கட்சி, அகில இலங்கை தமிழர் கூட்டணி, முஸ்லிம் விடுதலை முன்னணி, எக்ஸத் லங்கா மகாசமாஜ, ஈழவர் ஜனநாயக மன்னணி, ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி, சமஜவாதி ஜனதா பெரமுன, ருஹுணு ஜனதா கட்சி, தேசப்பிரேமி ஜதிக பெரமுண, எக்ஸ்தத் லங்கா பொதுசன கட்சி ஆகிய கட்சிகள் மற்றும் 18 சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்களே ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் அமைச்சர் சுசில் பிரமஜயந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி  தலைவரும், கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் அக்கட்சியின் செயலாளர் ஹஸன் அலி,  இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் அக்கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா, மக்கள் விடுதலை முன்னணியின சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஸந்த பியதிஸ்ஸ  ஆகியோர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் 11 அரசியற் கட்சிகளும், 22 சுயேட்சை குழுக்களும் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .