Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 30 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அட்டாளைச்சேன பிரதேச சபையின் அமர்வு நேற்று வியாழக்கிழமை தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் தலைமையில் பிரதேச சபைக் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தவிசாளர் நசீர் சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்.
இதனையடுத்து உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் தொடர்பான தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இதன் பின்னர் எதிர்க்கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் உள்ளடங்கலாக அனைத்து உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
மேற்படி வரவு செலவுத் திட்டத்தின்படி, 2012 ஆம் ஆண்டு அட்டாளைச்சேனைப் பிரதேச சபைக்கான வருமானமாக சுமார் 07 கோடியே 36 லட்சம் ரூபாய் எதிர்பார்க்கப்படுகிறது.
தவிசாளர் உட்பட 9 உறுப்பினர்களைக் கொண்ட மேற்படி பிரதேச சபையில், முஸ்லிம் காங்கிரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி 7 உறுப்பினர்களும், வெற்றிலைச் சின்னத்தில் தேசிய காங்கிரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி 2 உறுப்பினர்களும் உள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago