Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 03 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்)
நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள மத்தியமுகாம் 4 ம் குடியேற்றக் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பஸ்நிலையமும் பொதுச் சந்தையும் மக்கள் பாவனைக்கு விடாப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட மேற்படி நிலையங்கள் கடந்த 2008ஆம் ஆண்டு திறக்கப்பட்ட போதிலும் கடந்த 4 வருடங்களாக பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்
யுத்த சூழ் நிலை காரணமாக உகனை பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ள கிராமமொன்றிற்கு இந்த சந்தை தற்காலிகமாக மாற்றப்பட்டாலும் தற்போதும் தொடர்ந்தும் இயங்குவதன் காரணமாகவே நாவிதன்வெளி பிரதேச சபை நிர்வாகத்தினுள் அமைந்துள்ள சந்தையை இயங்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேச சபைத் தலைவரான த.கலையரசன் தெரிவித்ததர்.
யு.எஸ்.எயிட் நிறுவனம் இதேகாலப் பகுதியில் உகனை பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ள 3ம் குடியேற்றக் கிராமத்திலும் இப்படியான சந்தையொன்றை அமைத்துக் கொடுத்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
உகனை பிரதேச சபை எல்லைக்குள் உள்ள வாராந்த சந்தை கூடும் நாளில் தமது பிரதேச சபை நிர்வாகத்திகுரிய வாராந்த சந்தையும் கூடும் போது வியாபாரிகள் வியாபார ரீதியாக நஷ்டமடைகின்றனர். இதன் காரணமாகவே இச்சந்தையை கூட்;ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உகனை பிரதேச சபை வாராந்த சந்தையை பிறிதொரு நாளில் கூடுமாறு பிரதேச சபையிடம் தாம் கோரிக்கை முன் வைத்த போதிலும் அந்த சபையின் தலைவர் அதற்கு மறுத்து விட்டது எனவும்; த.கலையரசன் தெரிவித்தார்.
எதிர்வரும் மாதத்தில் சந்தை கூடுவதற்கும், பஸ் நிலையத்தை இயங்க வைப்பதற்கும் பிரதேச சமய, சமூக பிரமுகர்களின் இணக்கப்பாட்டுடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
Shanka Dharmapala Wednesday, 04 January 2012 03:49 PM
The contents of this news article is misinterpreting the situation. The bus standard is not functioning because the buses are stopped at the near by Central Camp Town and therefore, people are not coming to this bus stand. There was an attempt to start bus operations during 2009- 2010 by the civil society and the Nevathenvelli Pradeshiya Sabha. The arrangements were made with the Kalmunai Bus Depot. The Central Camp police extended their support to provide security to the place.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago