2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சட்டவிரோத மின்பாவனையில் ஈடுபட்ட 91பேர் கைது

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 24 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை ஆகிய செயலக பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களின் சட்டவிரோத மின்பாவனையில் ஈடுபட்ட 91பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து வருகைதந்த மின்சார சபையின் விசேட அதிகாரிகளும் கொழும்பிலிருந்து வருகைதந்த விசேட பொலிஸ் குழுவினரும் இணைந்து இன்று அதிகாலை 3 மணியளவில் மேற்கொண்ட அதிரடி பரிசோதனை நடவடிக்கையின்போதே மேற்படி சட்டவிரோத மின்பாவனையில் ஈடுபட்ட 91பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அக்கரைப்பற்றில் சட்டவிரோத மின்பாவனையாளர்களாக இனங்காணப்பட்டவர்களை கைதுசெய்வது இது 3ஆவது முறையாகும். இதுவரை 400இற்கும் மேற்பட்ட சட்டவிரோத மின்பாவனையாளர்கள் கைதுசெய்யப்பட்டு, தண்டம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .