2025 ஒக்டோபர் 05, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 130 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

Sudharshini   / 2014 டிசெம்பர் 31 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 130 குடும்பங்களுக்கு புதன்கிழமை (31) உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மலேசியாவிலுள்ள தமிழ் மக்களின் நிதி அனுசரணையில்  கல்முனை ரோட்டரிக் கழகத்தினால் இவ்வுலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன் தலைமையில் நாவிதன்வெளி ரோட்டரிக் கழகத்தின் தொழில் பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில்  நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை ரோட்டரிக் கழகத்தின் முன்னாள் தலைவர்களான எஸ்.ருத்திரன், பொறியலாளர் கென்றி அமல்ராஜ், பொறியலாளர் கே.விமலநாதன், நாவிதன்வெளி பிரதேச செயலக கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.தேவரஞ்சன், கிராம சேவை உத்தியோகத்தர்கள், கல்முனை ரோட்டரிக் கழக பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.   

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X