2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

பாடசாலையிலிருந்து இடைவிலகியவர்கள் தொடர்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு

Super User   / 2010 நவம்பர் 03 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான் )

பாடசாலைக் கல்வியில் இருந்து இடைவிலகிய மாணவர்களையும் பாடசாலைக்கு இதுவரை செல்லாதிருக்கும் மாணவர்களையும் இனங்கண்டு அவர்களை மீண்டும் பாடசாலைக்குள் கொண்டு வருவதற்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்று கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

கல்முனைக் கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் முறைசாரா கல்வி உதவி கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சகாப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலயத்தின் வலய கல்விப் பணிப்பாள்ர் எம்.ரி.எம்.தௌபிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கல்முனை வலயத்தில் உள்ள கல்முனை அல்-அஸ்ஹர், அல்-ஸுஹறா,  மஹ்மூத் மகளிர் கல்லூரி, அல்-பஹ்ரியா, அல்-மிஸ்பாஹ்,  சாய்ந்தமருது அல்-கமருன், மருதமுனை அல்-மதீனா போன்ற பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள், படசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள், கிராம சேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உட்பட மாணவர்களும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .