Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 நவம்பர் 10 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் அம்புலன்ஸ் ஒன்றின் மீது மோதியதில் பலத்த காயங்களுக்குள்ளாகி - அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்து அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை மருதையடியில் இன்று புதன்கிழமை நண்பகல் இடம்பெற்றது.
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் - தான் பயணிக்க வேண்டிய பாதை ஒழுங்கிலிருந்து விலகி எதிரே வந்த கோமாரி வைத்தியசாலைக்குச் சொந்தமான அம்புலன்ஸ் வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதையடுத்தே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிள் பலத்த சேதத்துக்குள்ளாகியதுடன், அம்புலன்ஸ் வண்டியும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி விபத்து தொடர்பாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .