2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

நற்பண்புகளுடன் வாழ்வோரை அதிகாரத்திற்குள் கொண்டு வரவேண்டும்: மார்க்க அறிஞர்கள்

Kogilavani   / 2011 பெப்ரவரி 17 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

இஸ்லாத்துக்கும்,  சமூக ஒழுக்க விழுமியங்களுக்கும் முரணாகச் செயற்படுவோரை ஓரம்கட்டுவதற்கும் , இஸ்லாமிய மார்க்கம் வகுத்துள்ள வழியில், நற்பண்புகளுடன் வாழ்வோரை அரசியல் அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்கும் எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலினைப் பயன்படுத்துதல் வேண்டும் என அக்கரைப்பற்றில் இடம்பெற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சந்திப்பொன்றில் கருத்துகள் வெளியிடப்பட்டன.

அக்கரைப்பற்றில் இன்று காலை இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது,  தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும் அக்கரைப்பற்றின் அரசியல் எதிர்காலம் குறித்தும் , இவை தொடர்பில் இஸ்லாமிய அறிஞர்களின் பங்களிப்பு பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

மேற்படி சந்திப்பில் கலந்து கொண்ட மார்க்க அறிஞர்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்தபோதே மேற்கண்ட விடயங்களை வெளியிட்டனர்.

அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில், அரசியல் அதிகாரத்தில் இருப்போர் - தமது நலனுக்காக  இளைஞர்களை போதை பழக்கத்துக்கு அடிமையாக்கி வருகின்றனர். வன்முறைகளும், பாதகச் செயல்களும் கட்டுக்கடங்காமல் இடம்பெற்று வருகின்றன. இவைகளை இல்லாது ஒழிக்க வேண்டும்.

மேலும்,  அக்கரைப்பற்றுப் பள்ளிவாசல்களுக்குப் பக்கத்தில் அப்பிரதேசத்தின் அமைச்சர் தலைமையிலேயே பாட்டுக் கச்சேரிகள் இடம்பெறுகின்றன. இந் நடவடிக்கையால் பள்ளிவாசலின் புனிதத்துக்கு பங்கம் ஏற்படுகின்றது, தொழுகையில் ஈடுபடுவோருக்கு இடையூறுகள் ஏற்படுகின்றன. இதை உரியவர்களிடம் சுட்டிக் காட்டியும் பயனில்லை.

எனவே,  ஒழுக்க விழுமியம் மற்றும் இஸ்லாமிய வரைமுறைகளுக்குள் கட்டுப்பட்டு வாழ்பவர்களை அரசியல் அதிகாரத்துக்குக் கொண்டு வருவதன் மூலம், அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் தலைவிரித்தாடும் மேற்படி சமூக சீர்கேடுகளை இல்லாதொழிக்க முடியும் என அங்கு உரையாற்றிய மார்க்க அறிஞர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று மாநகர சபைக்கான முஸ்லிம் காங்கிரஸின் முதன்மை வேட்பாளரும், இஸ்லாமிய மார்க்க அறிஞருமான அஷ்ஷேய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி  இந்த சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தார்.   


  Comments - 0

  • mohammed Sunday, 20 February 2011 02:01 PM

    அடடா என்ன பிரமாதம் ....இத எப்போதே செய்யணும் இப்ப ஏன் செய்றாங்க ?

    Reply : 0       0

    Rinas Mohammed Friday, 11 March 2011 09:53 AM

    அதுசரி, சிஹல உறுமய முடிஞ்சு, அடுத்து நம்மட ஆக்களா? வேனாம்டாப்பா.. அவங்க மாதிரி உங்களால சகதில இறங்கி எல்லா சண்ட பிடிக்க ஏலா. பிறகு சொல்லுவிங்க நியாயம் இல்ல நீதி இல்ல என்று. இல்லாத (அரசியலில் நியாயம் - இன்றைய சூழல்) ஒன்ற தேடுறது மடத்தனமா முடியும்.. இருக்கிறதுல நல்லதா தெரியுறதும், அதையே கடிவாளம் போடவும் முயன்றால் நல்ல முயற்சி என்று நினைக்கிறேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .