Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஜூலை 24 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஆர்.அஹமட்)
நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் மௌலவி கற்கை நெறியினை பூர்த்தி செய்த 75 பேருக்கு மௌலவி பட்டமளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
கல்லூரியின் நிர்வாக தலைவர் மௌலவி ஏ.எல்.இமாம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கிழக்கு மாகாணத்தில் உள்ள அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள்இ விரிவுரையாளர்கள் மற்றும் உலமாக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நிந்தவூர் ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அதாவுல்லா, நாடாளுமன்ற உறுப்பிர் எம்.ரி.ஹஸன்அலி, பைசால் காசிம் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் நிந்தவூர் ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் அரசியல்வாதிகள் கலந்துகொளடவதனால் பள்ளிவாசலில் நடாத்துவதற்கு அனுமதிக்கவில்லை. எவ்வாறாயினும் இன்றைய பட்டமளிப்பு விழாவில் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் மாத்திரம் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
56 minute ago
9 hours ago