Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2011 ஓகஸ்ட் 12 , பி.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
சந்தேகநபர்கள் சிலரை கைதுசெய்யச் சென்ற சம்மாந்துறை பொலிஸார் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட பொலிஸார் நால்வர் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
இத்தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மூவர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்மாந்தறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தஹனக, நேற்று மாலை சிகிச்சை பெற்று திரும்பியதாக சம்மாந்துறை பொலிஸார் - தமிழ்மிரருக்கு தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது..., சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் நடமாடிய மர்ம மனிதர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் மீது தாக்குதல் நடத்திய நபர்களை பொலிஸார் கைது செய்யச் சென்றபோதே அவர்கள்மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட விசேட அதிரடி படையினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பொலிஸாரையும் மர்ம மனிதர்கள் என்று கூறப்பட்ட நபர்களையும் காப்பாற்றினர்.
இத்தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mohamed Saturday, 13 August 2011 11:16 AM
Pothu makkaluku paathuhaappu illai. Marma manitharhalai kaapu. pothu makkalai adi. iraivan irukkinran.
Reply : 0 0
Dhesan Saturday, 13 August 2011 12:59 PM
பொது மக்கள் காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமே தவிர வன்முறையில் இறங்க கூடாது.. பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரியை தாகும் அளவுக்கு பொது மக்கள் தள்ளபட்டிருப்பது கவலைக்கிடமானது...
Reply : 0 0
m.c.najeeb Saturday, 13 August 2011 11:07 PM
பொலிசார் மீது தாக்குதல் நடத்துவது சரியல்ல
Reply : 0 0
SIRAJ Monday, 15 August 2011 12:25 PM
d
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
49 minute ago
52 minute ago
54 minute ago