2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

தேசிய காங்கிரஸின் தலைவராகவும் செயலாளராகவும் அமைச்சர் அதாவுல்லா மீண்டும் தெரிவு

Super User   / 2011 ஓகஸ்ட் 14 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

தேசிய காங்கிரஸின் தேசிய தலைவராகவும் பொது செயலாளராகவும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா மீண்டும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தேசிய காங்கிரஸின் 2011ஆம் வருடத்திற்கான பேராளர் மாநாடு அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போதே அமைச்சர் அதாவுல்லா மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த பேராளர் மாநாட்டில் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.எம்.உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண சபை முதல்வர் எச்.எல்.எம்.பாயிஸ், மாகாண சபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ.அமீர், எம்.எல்.துல்ஹர் நயீம், அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் சக்கி அதாவுல்லா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கட்சியின் புதிய அதியுயர் பீட மற்றும் அரசியல் பீட உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அவர்களின் விபரம்

சிரேஷ்ட பிரதி செயலாளர் நாயகம் - டாக்டர் ஏ.எல்.உதுமாவெல்லை (லெபனானிலுள்ள இலங்கை தூதுவராலயத்தின் இரண்டாவது செயலாளர்)

பிரதி செயலாளர் நாயகம் - ஐ.எல்.ஹமீட் (உள்ளூராட்சி மன்ற நிறுவத்தின் பணிப்பாளர்)

பிரதி செயலாளர் நாயகம் - எம்.எல்.சமட் (உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரின் பிரத்தியோக செயலாளர்)

பொருளாளர் - எம்.வசீர் (உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரின் ஊடக செயலாளர்)

பிரதி பொருளாளர் - ஏ.ஜே.ஜூனைத் (கல்முனை)

தேசிய அமைப்பாளர் - எம்.எஸ்.உதுமாலெவ்லை (கிழக்கு மாகாண அமைச்சர்)

பிரதி தேசிய அமைப்பாளர் -  சம்பத் (அம்பாறை)

பிரதி தேசிய அமைப்பாளர் - ஏ.பாரிஸ் (நிந்தவூர்)

கொள்கை பரப்புச் செயலாளர் - ஏ.பி.தாவூத் (உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரின் இணைப்புச் செயலாளர்)

இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் - சக்கி அதாவுல்லா (அக்கரைப்பற்று மாநகர மேயர்)

இளைஞர் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளர் - டாக்டர் சியா (மூதூர்)

பொதுசன தொடர்பு இணைப்பாளர் - எம்.எல்.ஏ.அமீர் (கிழக்கு மாகாண சபை உறுப்பினர்)

தொழில் சங்க விவகார செயலாளர் - எச்.எல்.எம்.பாயிஸ் (கிழக்கு மாகாண சபை முதல்வர்)

பொதுசன தொடர்பு இணைப்பாளர் - எம்.எல்.துல்ஹர் நயீம் (கிழக்கு மாகாண சபை உறுப்பினர்)

கல்வி விகார இணைப்பாளர் - எம்.எஸ்.நஸீர் (உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரின் இணைப்பு செயலாளர்)

சுகாதார விவகாரங்களுக்கான இணைப்பாளர் - டாக்டர் முஹம்மட் றகீஸ் (அக்கரைப்பற்று)

சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி இணைப்பாளர் - எம்.முஸம்மில் (பொத்துவில்)

மேலதிக கொள்கைப் பரப்புச் செயலாளர் - சட்டத்தரணி அன்சார் மௌலானா (முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர்)

இதேவேளை, அரசியல் பீட உறுப்பினர்களாக ஏ.ஹபீப் முகம்மட் (நிந்தவூர்), நூருல் பௌஸ் (மருதுமுனை), சட்டத்தரணி ரூபி (முன்னாள் காத்தான்குடி நகர சபை), சாஹிர் ஹுசைன் (முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர்), பதூர் கான் (பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்), பாலித புஸ்ப குமார (நாமல் ஓயா பிரதேச சபை - தவிசாளர்), எம்.ஏ.தம்பிக்கண்டு (முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்) ஏ.சபீஸ் (அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்) ஏ.ஜே.எம்.தாவூத் (அதிபர் - அக்கரைப்பற்று தொழிநுட்ப கல்லூரி), கியாவூத்தீன் (கிழக்கு மாகாண நெடுஞ்சாலைகள் அமைச்சரின் இணைப்பு செயலாளர்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0

  • mama Monday, 15 August 2011 11:14 PM

    முதல்ல எல்லாரும் கொஞ்சம் சிரியுங்கோவன்.

    ஹா ஹா ஹா ஹா இது என்ன பேராளர் மாநாடாமா?
    தலைவர் அதாஉல்லா சரி செயலாளர் யாரு? அடுத்த தலைவன் சக்கி, செயலாளரும் சக்கி?

    Reply : 0       0

    kuru Wednesday, 17 August 2011 07:23 AM

    பொறுத்திருங்கள்................

    Reply : 0       0

    சிறாஜ் Wednesday, 17 August 2011 04:53 AM

    மனிதன் மாறிவிட்டான்
    மரத்தில் ஏறிவிட்டான்
    அப்ப அவன் யாரு?

    Reply : 0       0

    IBNU ABOO Wednesday, 17 August 2011 02:07 AM

    போட்டியும் பொறாமையும் கலந்ததுதான் அரசியல். தூய்மைக்கு அரசியலை ஆராயக்கூடாது. ஒரே இறைவனை ஏற்றுக்கொண்ட நம்மவர்களுக்கிடையே எத்தனை பிரிவுகள், கலகங்கள், கொலைகள். இந்த அரசியல் எம்மாத்திரம். எங்கேயோ நல்லது நடக்கட்டும். முதல்ல மர்ம மனிதன் பிரச்சினைய தீர்க்க ஒன்றுபடுங்கள். அதிலேயும் எங்கோ பிரதேச வாதமாம். நாம் உருப்படற சனங்களா?

    Reply : 0       0

    Amjath Tuesday, 16 August 2011 11:45 PM

    மச்சான் சிராஜ், சரியான கேள்வி.
    இப்படி ஒரு கேள்வி இல்ல, பல கேள்வி கேட்கலாம்...
    அப்படி கேட்டா அரசியல்வாதி எண்டு செல்ல நாக்கு கூசும் ஆனா ஒருகேள்விக்கு மாத்திரம் இவரு பொறுத்தமானவரு அது எது எண்டு உங்க எல்லாருக்கும் நல்லா தெரியுமே சொல்லுங்க பார்ப்பம்............???????

    Reply : 0       0

    Doc - KSA Tuesday, 16 August 2011 10:38 PM

    Discrimination on any communities will never solve any of our own issues .We should find diplomatic way to find the solution of all our communal issues rather then blaming on others. We have been cheated by all politicians time to time. So wake of guys.

    Reply : 0       0

    kithrees Tuesday, 16 August 2011 09:20 PM

    Athavullah duke for Akkaraipattu some area's yahhhhh..hahhahha..

    Reply : 0       0

    hoh Tuesday, 16 August 2011 06:20 PM

    I can understand his party format like a NGO or sports clubs. lol lol lol .....lol.....lol....

    Reply : 0       0

    சிறாஜ் Tuesday, 16 August 2011 05:19 AM

    அதாக்கு பப்படம் போடத்தேவை இல்லை. வேறு ஏதேனும் போடுங்க அம்பாரை மக்களின் வாக்குகளால் கண்டிக்கு போகவில்லை.
    இலங்கையில் எந்த மூலையில் போய் தேர்தல் கேட்டால் வெற்றி பெறும் தகுதி றவூப் ஹக்கீமுக்கு இருக்கு உங்கட அதாபுக்கு இருக்கா என்று கேட்டு சொல்லுங்க....

    Reply : 0       0

    oor kuruvi Tuesday, 16 August 2011 03:23 AM

    கடுமையா சண்ட புடிக்காதிங்க. இந்த காலத்தில எல்லாம் மர்மம் தானுங்கோ.

    Reply : 0       0

    senaiyuraan Monday, 15 August 2011 11:27 PM

    முனாஸ் அவேர்களே அம்பாறை மாவட்டத்தின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்று கண்டிக்கு செல்லவில்லை '
    அதாக்கு வாக்கு போட்ட மக்களோடதான் அவர் இருக்கார் அரசியலுக்காக பொய் சொல்ல மாட்டார் என்பதுன் தாங்கள் அறியாத உண்மை அவருக்கு நீங்கள் பப்படம் போட தேவல்லை.

    Reply : 0       0

    meenavan Monday, 15 August 2011 04:47 AM

    கட்சியின் தலைவர் பதவியையும்,பொதுசெயலாளர் பதவியையும் சமகாலத்தில் தன்னகத்தே வைத்துள்ள ஒரே நபர் அதா தான். இதுவும் ஒரு வகை சர்வாதிகாரம்தானே? அதுவும் ஏகமனதான தெரிவு ஆஹா ஆஹா சபாஷ்.... க்றிஸ் பூதம் பிச்சை வாங்க வேணும்.

    Reply : 0       0

    sasa Monday, 15 August 2011 11:13 PM

    முனாஸ் அவேர்களே அதாக்கு வாக்கு போட்ட அட்டாளைச்சேனை மக்கள் நாங்கள் பார்க்கும் விடயம் அது யாருக்கும் பணம் கொடுத்து வாங்கிய வாக்குகள் அல்ல கொள்கைக்கு அளிக்கப்பட்ட பெறுமதியான வாக்குகள் என்பதை ஒருநாளும் மறக்க வேண்டாம்.

    Reply : 0       0

    Doc - KSA Monday, 15 August 2011 10:11 PM

    Fantastic comments. Guys, let us think practically. We need unity which must taken by (not politician) by intellectuals.This unity should be built on common interests. It's a long term project and intellectuals from various cities must come forward or we must pull them.

    Reply : 0       0

    Munas Monday, 15 August 2011 10:08 PM

    அப்படியென்றால், அட்டாளைச்சேனையில் உதுமாலெப்பையினூடாகவும், மருதமுனையில் துல்கர் நயீம் ஊடாகவும், சம்மாந்துறையில் அமீர் ஊடாகவும் - அதாஉல்லா பெற்றுக் கொண்டவைகளுக்குப் பெயர் என்ன? பப்படமா??

    Reply : 0       0

    sara Monday, 15 August 2011 09:22 PM

    அப்போ கட்சியோட அடுத்த தலைவர் சக்கி தானோ.....

    Reply : 0       0

    kumar Monday, 15 August 2011 09:07 PM

    what u meaning well educated?

    Reply : 0       0

    mafas Monday, 15 August 2011 08:37 PM

    அவர் இல்லை என்றால் கட்சி இல்லைதான். நீங்கள் அதாவுல்லாவைப்பற்றி கதைக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? நாங்கள் அதாவுல்லாவுக்கு வாக்களித்தோம். அதன் பயன் அக்கரைபற்று மக்களாகிய எங்களுக்கு கிடைகின்றது.

    Reply : 0       0

    bis Monday, 15 August 2011 06:35 PM

    தலைவர் செயலாளர் என்ன எல்லாமே அவர்தானுங்க! அவரில்லை என்றால் கட்சியே இல்லையுங்க!

    Reply : 0       0

    hoh Monday, 15 August 2011 03:55 PM

    I can understand from this Akkaraipattu peoples are well educated people. Lol lol

    Reply : 0       0

    Dean Monday, 15 August 2011 01:21 PM

    பெயரை மாற்றி அக்கரைப்பற்று காங்கிரஸ் என்று மாற்றினால் பொருத்தமாக இருக்கும்.

    Reply : 0       0

    imran.. add Monday, 15 August 2011 06:27 AM

    குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்கள் இவர்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8