Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 25 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
அவுஸ்திரேலிய பெலாரட் (Ballarat) பல்கலைக்கழகத்தின் சர்வதேச கல்வி நடவடிக்கைகளை தெளிவுபடுத்தும் கருத்தரங்கு இன்று மாலை அதன் பிராந்திய கற்கை நிலையமான கல்முனை அல்-சிம்ஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
இப் பல்கலைக்கழகத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் அவுஸ்திரேலிய பெலாரட் பல்கலைக்கழத்தின் பிரதிநிதி பிரைன் ஹோல், பெலாரட் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய பிராந்திய பிரதிநிதி வஜா வா ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.
இப்பல்கலைக்கழகத்தின் சர்வதேச கற்கை நிலையங்கள் சிங்கப்பூர், வியட்னாம், சீனா, இலங்கை ஆகியவற்றில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
fazmi Saturday, 27 August 2011 07:23 PM
கலாநிதி பட்டத்தை வைத்துத்தான் ....................... தென்கிழக்கு பல்கலைக்கழ கவுன்ஸில் உறுப்பினராகி ஊர் மக்களை ....மாற்றினார்.
Reply : 0 0
siraj Friday, 02 September 2011 05:18 AM
இங்கு ஏன் இந்த விமர்சனம்? காரணம் பொறாமை. இங்கு வாயடிப்போர் யாருக்கேனும் இலவசமாக கலாநிதிப்பட்டம் வேணுமா என்று கேட்டால் வாய்கிளியுமே.
சும்மா பம்மாத்துக்காட்டாம தேவையானதை பேசுங்கப்பா. முடிந்தவன் முடிந்ததை செய்துள்ளான். உன்னால் முடியுமா செய். முடியாதா வாய் மூடி இரு.....
குழப்பாதே குழம்பாதே.
Reply : 0 0
Shawfy Sunday, 28 August 2011 08:52 PM
அம்பாறை மாவட்டத்திலுள்ள சில ஊடகவியலாளர்கள் கலாநிதி என்று அழைக்கப்படுகின்றனர். எனினும் அவர்கள் எவ்வாறு கலாநிதி பட்டம் பெற்றார்கள். பாரிய கேள்விக்குறி???????????
Reply : 0 0
amaan Sunday, 28 August 2011 04:31 PM
போலி கலாநிதி ஆசாமிகளை அறிமுப்படுத்தும் கலாநிதி பட்டம் பெற்றதாக கூறும் ஊடகவியலாளருக்கு தலை இருக்க வேண்டுமே, அல்லது தானும் அது போன்று தானா ?
Reply : 0 0
M. Majeed Sunday, 28 August 2011 10:09 AM
தான் பெற்ற இன்பம் வையகமும் பெற நினைப்பது தவறா? இப்படி எத்தனையோ பேர் இருக்கிறார்கள். பாவம் ரியாஸ். தனக்குள்ள மதிப்பை புரிந்து இனி நடப்பார்.
Reply : 0 0
gaf Sunday, 28 August 2011 04:33 AM
அவர் ஒரு நல்ல விடயத்தை செய்துள்ளார் , அதை பாராட்டுங்கள். சும்மா விமர்சனம் செய்வதை விட்டுவிடுங்கள் . அது நல்லவர்களுட்கு உரிய பண்பு இல்ல .
Reply : 0 0
mohamed Saturday, 27 August 2011 08:29 PM
திரு ரியாஸ் பேராதெனிய பல்கலைக் கழகத்தில் வெளிவாரி கலை பட்டதாரி .
Reply : 0 0
zakee Saturday, 27 August 2011 07:35 PM
இவர் தான் அந்த கலாநிதி?????????????????
Reply : 0 0
zaiyro Saturday, 27 August 2011 07:26 PM
கலாநிதி என்று ஊரை ஏமாற்றவில்லை. தன்னை தானே ஏமாற்றுகிறார். எம்.ஏ. எங்கே முடித்தார் என்று கேட்டு சொல்ல முடியுமா?
Reply : 0 0
nafeel.saad Friday, 26 August 2011 03:14 AM
நானும் ஒரு கலாநிதி பட்டத்தை எடுக்க எவ்வளவு செலவாகுமோ தெரியல்ல? one day service மாதிரி விரைவான service இருந்தால் நல்லம்.
Reply : 0 0
oor kuruvi Saturday, 27 August 2011 06:11 PM
ஹலோ ராசிக், கற்பூர வாசனைய புரிய தேவல்ல. சரியான யதார்த்தத்த புரிந்துக்கோங்கோ. போலி பட்டங்கள கண்டு ஏமாராதிங்க இப்ப எல்லாம் காசுக்கு பட்டம் படிப்புக்கு இல்ல இப்ப பதினைந்து வயது பொடியனும் கலாநிதி பட்டம் பெருகிறாங்க. ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி சும்மா புரியுதில்ல.
Reply : 0 0
nafeel.saad Saturday, 27 August 2011 04:50 PM
கற்பூர வாசனை புரியாததனால்தான் போலியான பல்கலைக்கழகங்களும் போலியான டாக்டர் பட்டங்களும்.
Reply : 0 0
s.h.razeek kalmunai Saturday, 27 August 2011 03:26 PM
கழுதைக்கு கட்பூர வாசனை புரியுமா ?
Reply : 0 0
Manithan Friday, 26 August 2011 11:08 AM
கல்வியை நமது இலவசக் கல்வியையும் விலை கூவி விற்கும் காலம் விரைவில் வந்துவிடும் என்பதற்கு பிள்ளையார் suliyaai eduttukkollalaama?
Reply : 0 0
oor kuruvi Friday, 26 August 2011 05:33 AM
மக்களே படித்தவர்களே புத்தி ஜீவிகளே ஒருகாலம் இருந்தது கலாநிதி என்றால் அதற்கு உண்மைப் பொருள் இருந்தது இப்ப எல்லாம் அப்படி இல்ல சிலரை தவிர மற்ற எல்லாம் கலாநிதி பட்டம் பெற படிக்கத் தேவை இல்லங்க. ஆன்லைன் மூலம் ஒரே நாளில் சிறு தொகை பணத்திற்கு இலகுவாக பெறலாமுங்கோ
Reply : 0 0
mohamed Friday, 26 August 2011 05:28 AM
திரு ரியாஸ் எந்த பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் எப்படி பெற்றார் என்பது ஊடக துறையினருக்கு தெரியாதப்பா.
Reply : 0 0
Sahmy Friday, 26 August 2011 04:00 AM
Who is the Dr. S.L.Riyas?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
2 hours ago