Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 26 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று மாவட்ட செயலக பிரதான மண்டபத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.
இங்கு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களான அமைச்சர் ஏ.எல.எம்.அதாவுல்லா, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, சிரேஷ்ட அமைச்சர்களான பீ.தயாரட்ன, அதாவுட செனவிரெட்ன, பிரதியமைச்சர் நிர்மல கொத்தலாவ, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசீம், எம்.ரி.ஹஸன் அலி, பீ.எச். பியசேன, ஸ்ரீயாணி விஜேவிக்ரம, கிழக்கு மாகாண ஆளுநனர் மொஹான் விஜேவிக்ரம, கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெவ்வை, விமலவீர திஸாநாயக்க, துரையப்பா நவரெட்னராஜா அம்பாறை அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், இராணுவ, பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.
இந்த கூட்டத்தின் போது, மாவட்ட அபிவிருத்தி வேலைத் திட்டம், மாகாண சபை அபிவிருத்தி வேலைத் திட்டம் மற்றும் ஏனைய வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டதுடன், திவிநெகும, கமநெகும, வெள்ளப்பாதிப்பு புனர்நிர்மாண வேலைத் திட்டம், உலக உணவுத் திட்டம், சமூர்த்தி வேலைத் திட்டம், மீள் எழுச்சித் செயற்திட்டம் மற்றும் நெல்சிப் திட்டம் போன்றவை பற்றி கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Rizadh Rock Kalmunai Friday, 26 August 2011 10:17 PM
முடியல்ல ..
Reply : 0 0
Roomy Friday, 26 August 2011 10:56 PM
என்னத்துக்கு?
Reply : 0 0
rakkish Saturday, 27 August 2011 12:31 AM
உள் காயத்துக்கு வெளியில மருந்து?? நல்ல வைத்தியம்...
Reply : 0 0
Rizadh Rock Kalmunai Saturday, 27 August 2011 02:08 AM
கடைசி வரைக்கும் எங்க அமைச்சர் ஒருவர் வரவே இல்லையா ?? ஓ .. மன்னிக்கவும் அவரு ஜனாதிபதி உத்தரவிட்டா மட்டும்தான் அம்பாறை பக்கமே வருவாரு ....!!!
Reply : 0 0
meenavan Saturday, 27 August 2011 05:03 AM
அம்பாறை மாவட்ட எம்.பி.க்கள் அனைவரும் உள்ளனர். ஹரிஷ் ஐ காணவில்லை.அவருக்கு அபிவிருத்தி தேவையில்லையோ? அல்லது ரோபர்ட் ஒ பிலேக் உடன் பேச்சுவார்த்தை நடத்த தலைவர் அழைத்து ஒத்திகை நடக்கின்றதோ?
Reply : 0 0
siraj Saturday, 27 August 2011 05:04 AM
யாரு ரிசாட் உங்க அமைச்சர்? வீட்ட ஒருவர் இருக்காரா?
என்னா இங்கு முக்கிய ஆட்கள் எல்லாம் வந்திருக்கினம்
உங்கட அமைச்சருடைய பெயர் கொஞ்சம் சொல்லுவிங்களா?
Reply : 0 0
fathaj Saturday, 27 August 2011 05:34 AM
எங்க உரு பொம்மை 2 அப்படி இருக்கு பார்த்திங்கள ?
அழகா இருக்கா?..........
Reply : 0 0
ruzny Saturday, 27 August 2011 08:20 AM
பொம்மையை உருவாக்கினது நீங்கதானே .............
Reply : 0 0
Birdeye Saturday, 27 August 2011 10:52 PM
ஹரீஸ் மீடின்குக்கு போகவில்லையா
Reply : 0 0
sharmee Monday, 29 August 2011 04:45 AM
வந்தா கிழிப்பார் ?????????
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
1 hours ago